செய்தி செய்தி

தமிழ்நாடு

சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்! அமைச்சர் சாமிநாதன் ஆதங்கம்

Added : நவ 25, 2021
Share
Advertisement
அவிநாசி: ''தமிழகத்தின் நிதிநிலை மோசமாக இருப்பினும், மக்கள் நலன் சார்ந்த பணியில் முதல்வர் கவனம் செலுத்துகிறார்,'' என, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பேசினார்.அவிநாசியில், 'மக்கள் குறை கேட்கும் முகாம்,' குலாலர் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், தலைமை வகித்தார்.செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மக்களிடம் இருந்து மனுக்களை



அவிநாசி: ''தமிழகத்தின் நிதிநிலை மோசமாக இருப்பினும், மக்கள் நலன் சார்ந்த பணியில் முதல்வர் கவனம் செலுத்துகிறார்,'' என, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பேசினார்.அவிநாசியில், 'மக்கள் குறை கேட்கும் முகாம்,' குலாலர் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், தலைமை வகித்தார்.செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், மக்களிடம் இருந்து மனுக்களை பெற்று, பேசியதாவது:கடந்த, 10 ஆண்டுகளில் சரியான திட்டமிடல் இல்லாததால், அரசின் நிதிநிலை இக்கட்டான சூழலில் உள்ளது. சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்பதற்கேற்ப, நிதிநிலை மோசமாக இருந்தாலும், மக்கள் நலன் சார்ந்த பணிகளில் முதல்வர் கவனம் செலுத்தி வருகிறார். நிதிநிலையும், படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது.அரசு பொறுப்பேற்ற போது, மாநிலத்தில் தினசரி, 35 ஆயிரம் பேர் தொற்று பாதிப்புக்கு உள்ளான நிலையில், அரசு எடுத்த துரித நடவடிக்கை, மருத்துவம் சார்ந்த பணிகள் மேம்படுத்தப்பட்டதன் விளைவாக, தற்போது, 1,000க்குள் குறைந்திருக்கிறது; இருப்பினும், முழுமையாக குறையவில்லை.திருப்பூரில், 85 சதவீதம் பேர், முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 35 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.
அனைவரும் சரியான கால இடைவெளியில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். சமூக இடைவெளி பின்பற்றுவது, தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்ப்பது மட்டுமே, தொற்றை ஒழிக்க ஒரே தீர்வு.இவ்வாறு, அவர் பேசினார்.நுாற்றுக்கணக்கான மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு வழங்கினர். தி.மு.க., மாவட்ட செயலாளர் பத்மநாபன், பொதுக்குழு உறுப்பினர் சரவணன் நம்பி, ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாஷ், நகர செயலாளர் பொன்னுசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X