சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தடுப்புச்சுவரில் மோதிய லாரி அசம்பாவிதம் தவிர்ப்பு

Added : நவ 25, 2021
Share
Advertisement
வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே மையத்தடுப்பில் லாரி மோதியதில், டீசல் ஆறாக ஓடியது. இருப்பினும், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.காங்கயத்தில் இருந்து ஈரோடு மாவட்டம், நஞ்சை ஊத்துக்குளிக்கு கால்நடை தீவனம் ஏற்றி லாரி சென்று கொண்டிருந்தது. முத்துார் - கணேசபுரம் அருகே, அதிகாலை 5.30 மணிக்கு, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, மையத்தடுப்புச்சுவரில் பலமாக மோதியது.இதில், லாரியின்

வெள்ளகோவில்: வெள்ளகோவில் அருகே மையத்தடுப்பில் லாரி மோதியதில், டீசல் ஆறாக ஓடியது. இருப்பினும், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.காங்கயத்தில் இருந்து ஈரோடு மாவட்டம், நஞ்சை ஊத்துக்குளிக்கு கால்நடை தீவனம் ஏற்றி லாரி சென்று கொண்டிருந்தது. முத்துார் - கணேசபுரம் அருகே, அதிகாலை 5.30 மணிக்கு, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, மையத்தடுப்புச்சுவரில் பலமாக மோதியது.இதில், லாரியின் முன்புற சக்கரம் ஒன்று தனியாக கழன்று விழுந்தது. டீசல் டேங்க் உடைந்து டீசல் சாலையில் ஆறாக ஓடியது. இருப்பினும், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. லாரி டிரைவர் ராமசாமி எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினார்.லாரி மோதிய வேகத்தில், நான்கு மையத்தடுப்பு சுவர் பலத்த சேதம் அடைந்தது. போலீசார் உடனே சென்று, கிரேன் மூலம் லாரியை மீட்டு, அப்புறப்படுத்தப்படுத்தினர். விபத்து குறித்து, வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X