செய்தி செய்தி

தமிழ்நாடு

இழப்பை தடுக்கும் காப்பீடு வேளாண் துறை அறிவுறுத்தல்

Added : நவ 25, 2021
Share
Advertisement
பல்லடம்: இழப்பை தவிர்க்க, பயிர் காப்பீடு செய்து கொள்ளுங்கள் என, விவசாயிகளுக்கு, பல்லடம் வேளாண் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இது குறித்து, பல்லடம் வேளாண் துறை உதவி இயக்குனர் பாலாமணி அறிவிப்பு:பல்லடம் வட்டாரத்தில், நடப்பு ராபி பருவத்தில் சோளம், மக்காச்சோளம், பயறு வகைகளான கொண்டைக்கடலை, கொள்ளு உள்ளிட்டவை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. எதிர்பாராத விதமாக

பல்லடம்: இழப்பை தவிர்க்க, பயிர் காப்பீடு செய்து கொள்ளுங்கள் என, விவசாயிகளுக்கு, பல்லடம் வேளாண் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இது குறித்து, பல்லடம் வேளாண் துறை உதவி இயக்குனர் பாலாமணி அறிவிப்பு:பல்லடம் வட்டாரத்தில், நடப்பு ராபி பருவத்தில் சோளம், மக்காச்சோளம், பயறு வகைகளான கொண்டைக்கடலை, கொள்ளு உள்ளிட்டவை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. எதிர்பாராத விதமாக ஏற்படும் இயற்கை சீற்றங்கள் காரணமாக விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நஷ்டத்தில் இருந்து தப்பிக்க, விவசாயிகள் காப்பீடு செய்து கொள்ள வேண்டியது அவசியம். மக்காச்சோளத்துக்கு, ஏக்கருக்கு, ரூ.464, கொண்டக்கடலைக்கு, 256 ரூபாய், சோளத்துக்கு, 35 ரூபாய் என, காப்பீடு பிரீமியம் தொகை செலுத்த வேண்டும்.நவ., 30க்குள், மக்காச்சோளம், கொண்டைக்கடலை பயிர்களுக்கும், டி.ச., 15க்குள், சோளத்துக்கு காப்பீடு செய்யவும் காலக்கெடு உள்ளது.
ஆதார் அட்டை, புகைப்படம், பயிர் சான்றிதழ் ஆகியவற்றுடன் அரசு இ சேவை மையம், அல்லது வேளாண் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகள் காப்பீட்டு திட்டத்துக்கு பதிவு செய்து கொள்ளலாம். விவரங்களுக்கு பல்லடம் வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகவும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X