செய்தி செய்தி

தமிழ்நாடு

தேர்தல் பணியாளர்கள் விபரம்: கல்வித்துறையில் சேகரிப்பு

Added : நவ 25, 2021
Share
Advertisement
திருப்பூர்: உள்ளாட்சி தேர்தல் பணியாற்ற தயார் நிலையில் இருக்கும் ஆசிரியர்கள், கல்வி அலுவலர்களின் விபரங்கள் திரட்டும் பணி திருப்பூரில் துவங்கியுள்ளது.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் இந்த வாரம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்பமனு பெறும் படலம் ஏறத்தாழ எல்லா கட்சிகளிலும் துவங்கி



திருப்பூர்: உள்ளாட்சி தேர்தல் பணியாற்ற தயார் நிலையில் இருக்கும் ஆசிரியர்கள், கல்வி அலுவலர்களின் விபரங்கள் திரட்டும் பணி திருப்பூரில் துவங்கியுள்ளது.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் இந்த வாரம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் விருப்பமனு பெறும் படலம் ஏறத்தாழ எல்லா கட்சிகளிலும் துவங்கி விட்டது.இந்நிலையில், ஓட்டுச்சாவடி மையம், ஓட்டுச்சாவடிகளில் பணியில் ஈடுபட உள்ள அதிகாரிகள் மற்றும் அலுவலர் பட்டியல் தயாரிக்க ஒவ்வொரு துறைக்கும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்ட கல்வித்துறையில், தேர்தல் பணியாற்ற உள்ள ஆசிரியர்களின் விவரங்கள திரட்டும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்கள், கல்வி அலுவலக ஊழியர்கள் பெயர், பள்ளி, ஊதிய விவரம், பணிபுரியும் இடம், வசிக்கும் இடம், சொந்த ஊர், ஏற்கனவே தேர்தல் பணியாற்றி உள்ளார்களா, கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனரா உள்ளிட்ட விபரங்கள் விண்ணப்ப படிவங்கள் மூலமாக சேகரிக்கப்படுகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X