வயது வரம்பில் தளர்வு விளையாட்டு வீரர்கள் மகிழ்ச்சி

Added : நவ 25, 2021
Share
Advertisement
திருப்பூர்: இந்திய பல்கலை கூட்டமைப்பு தேசிய, பல்கலை போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களின் வயது வரம்பை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.நாடு முழுதும் பல்கலை, மண்டலம், அகில இந்திய அளவில் நடக்கும் போட்டிகளில், ஒவ்வொரு கல்லுாரியில் இருந்தும் பலர் பங்கேற்பர். இப்போட்டிகளில், பங்கேற்கும் மாணவர்களின் அதிகபட்ச வயது வரம்பு, 25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளாக

திருப்பூர்: இந்திய பல்கலை கூட்டமைப்பு தேசிய, பல்கலை போட்டியில் பங்கேற்கும் போட்டியாளர்களின் வயது வரம்பை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.நாடு முழுதும் பல்கலை, மண்டலம், அகில இந்திய அளவில் நடக்கும் போட்டிகளில், ஒவ்வொரு கல்லுாரியில் இருந்தும் பலர் பங்கேற்பர். இப்போட்டிகளில், பங்கேற்கும் மாணவர்களின் அதிகபட்ச வயது வரம்பு, 25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக கல்லுாரி, பல்கலை அளவிலான விளையாட்டு போட்டிகள் முழுமையாக நடத்தப்படவில்லை. இதனால், 2019 - 2021 வரை படித்த மாணவர்களுக்கு உதவும் வகையில், நடப்பு கல்வியாண்டு மட்டும் (2021-2022) தேசிய பல்கலைகளுக்கு இடையேயான போட்டியில், பங்கேற்பவர்களுக்கான வயது வரம்பை, 26 ஆக உயர்த்தி, இந்திய பல்கலை கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதனால், கல்லுாரி விளையாட்டு வீரர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X