ஸ்மார்ட் ரோடு பணி மீண்டும் துவக்கம்| Dinamalar

செய்தி செய்தி

தமிழ்நாடு

'ஸ்மார்ட் ரோடு' பணி மீண்டும் துவக்கம்

Added : நவ 25, 2021
Share
திருப்பூர்: ராயபுரத்தில் அரசியல் கட்சிகள் தங்கள் கொடிக்கம்பங்களை அகற்றிக் கொண்டதால், ஸ்மார்ட் ரோடு பணி மீண்டும் துவங்கியது.திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் ராயபுரம் பகுதியில் ஸ்மார்ட் ரோடு அமைக்கும் பணி திட்டமிடப்பட்டு துவங்கியது. இதில் பெருமளவு பணி நிறைவடைந்த நிலையில், ராயபுரம் ரவுண்டானா அருகே

திருப்பூர்: ராயபுரத்தில் அரசியல் கட்சிகள் தங்கள் கொடிக்கம்பங்களை அகற்றிக் கொண்டதால், ஸ்மார்ட் ரோடு பணி மீண்டும் துவங்கியது.திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் ராயபுரம் பகுதியில் ஸ்மார்ட் ரோடு அமைக்கும் பணி திட்டமிடப்பட்டு துவங்கியது. இதில் பெருமளவு பணி நிறைவடைந்த நிலையில், ராயபுரம் ரவுண்டானா அருகே ஸ்மார்ட் ரோடு துவங்கும் இடத்தில் மட்டும் பணி மேற்கொள்ளப்படவில்லை.அவ்விடத்தில், சில அரசியல் கட்சியினர் மேடை அமைத்து தங்கள் கட்சி கொடிக்கம்பங்கள் அமைத்திருந்தனர். அவற்றை அகற்றினால் மட்டுமே ஸ்மார்ட் ரோடு பணி நிறைவடையும் நிலை காணப்பட்டது.
இது குறித்து உரிய கட்சி நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அதன்பின் கடந்த சில நாட்களில் ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் கொடிக்கம்பங்களை அகற்றினர்.தற்போது, அனைத்து கொடிக்கம்பங்களும் அகற்றப்பட்டு விட்டன. இதனால், கொடிக்கம்ப மேடைகள் இடித்து அகற்றும் பணி துவங்கியுள்ளது. இதனால், பல நாட்களாக கிடப்பில் போடப்பட்ட 'ஸ்மார்ட் ரோடு' பணி மீண்டும் துவங்கியுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X