சாட்சிக்கு மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு

Added : நவ 25, 2021
Share
Advertisement
திருப்பூர்: கொலை வழக்கில் சாட்சியம் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.காங்கயம் அருகே தம்மரெட்டிபாளையத்தைச் சேர்ந்த குமாரசாமி என்பவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நடராஜ் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இவ்வழக்கு விசாரணை தாராபுரம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதில் அப்பகுதியை சேர்ந்த தங்கராஜ்,

திருப்பூர்: கொலை வழக்கில் சாட்சியம் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.காங்கயம் அருகே தம்மரெட்டிபாளையத்தைச் சேர்ந்த குமாரசாமி என்பவர் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நடராஜ் என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இவ்வழக்கு விசாரணை தாராபுரம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இதில் அப்பகுதியை சேர்ந்த தங்கராஜ், ஆனந்தகுமார் உள்ளிட்ட சிலர் அரசு தரப்பு சாட்சியங்களாக சேர்க்கப்பட்டு, சாட்சியமும் அளித்துள்ளனர்.இது குறித்து நடராஜின் மகன் சந்தோஷ்குமார் சாட்சியம் அளித்த நபர்களை போனிலும், நேற்று முன்தினம் நேரிலும் சென்று மிரட்டியுள்ளார். காங்கயம் போலீசில் செய்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X