ஆறுமுகசாமி கமிஷனுக்கு மாற்று இடம்அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

Added : நவ 25, 2021
Share
Advertisement
புதுடில்லி:'ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனுக்கு, நல்ல வசதியுடன் கூடிய மாற்று இடம் வழங்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 2016ல் அனுமதிக்கப்பட்டார்; சிகிச்சை பலனின்றி 2016, டிச., 5ல் காலமானார். ஜெயலலிதா

புதுடில்லி:'ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனுக்கு, நல்ல வசதியுடன் கூடிய மாற்று இடம் வழங்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 2016ல் அனுமதிக்கப்பட்டார்; சிகிச்சை பலனின்றி 2016, டிச., 5ல் காலமானார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க, நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது.

இந்த விசாரணைக்கு தடை கோரி அப்பல்லோ மருத்துவமனை தாக்கல் செய்த மனுவை ஏற்று, ஆறுமுகசாமி கமிஷனுக்கு உச்ச நீதிமன்றம் 2019ல் தடை விதித்தது.இந்த தடையை நீக்கக் கோரி தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீது விசாரணை நடந்து வருகிறது.இதற்கிடையில், ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன் ஆஜராக விலக்கு அளிக்கக் கோரி அப்பல்லோ மருத்துவமனை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் அப்பல்லோ மருத்துவமனை மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் அப்துல் நசீர், கிருஷ்ண முராரி அடங்கிய அமர்வு முன் நடந்து வருகிறது. நேற்று நடந்த விசாரணையின் போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது: ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்கும் ஆறுமுகசாமி கமிஷன் பற்றி தங்களுக்கு உள்ள சந்தேகங்களை, ஒரு மனுவாக அப்பல்லோ மருத்துவமனை தாக்கல் செய்ய வேண்டும். அந்த மனுவை நாங்கள் பரிசீலித்து, இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிப்போம். ஆறுமுகசாமி கமிஷனுக்கு உதவ, மருத்துவக் குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்ற அப்பல்லோ மருத்துவமனையின் ஆலோசனையை ஏற்கிறோம்.
எங்களிடம் தாக்கல் செய்யும் மனுவின் பிரதியை, ஆறுமுகசாமி கமிஷனின் வழக்கறிஞரிடமும் அப்பல்லோ மருத்துவமனை வழங்க வேண்டும்.மேலும் ஆறுமுகசாமி கமிஷன் விசாரணை, 200 சதுர அடி பரப்பளவு அடங்கிய அறையில் நடந்து வருவது அதிருப்தியளிக்கிறது. கமிஷனுக்கு இருக்கைகள் உட்பட நல்ல வசதியுடன் கூடிய பெரிய அறையை ௩௦ம் தேதிக்குள் தமிழக அரசு வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து விசாரணை ௩௦ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X