பொது செய்தி

இந்தியா

கொரோனா தடுப்பூசி கொள்முதலுக்கு ஏ.டி.பி., ரூ.11,000 கோடி கடனுதவி

Added : நவ 25, 2021
Share
Advertisement
புதுடில்லி:கொரோனா தடுப்பூசி மருந்தை கொள்முதல் செய்வதற்காக, இந்தியாவுக்கு 11 ஆயிரத்து 185 கோடி ரூபாய் கடன் வழங்க ஆசிய வளர்ச்சி வங்கியான, ஏ.டி.பி., ஒப்புதல் வழங்கியுள்ளது. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இயங்கி வரும் ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கு கடன் வழங்குகிறது.கடந்த ஆண்டு இந்த வங்கி இந்திய நகர்ப்புறஆரம்ப சுகாதார நிலையங்களை

புதுடில்லி:கொரோனா தடுப்பூசி மருந்தை கொள்முதல் செய்வதற்காக, இந்தியாவுக்கு 11 ஆயிரத்து 185 கோடி ரூபாய் கடன் வழங்க ஆசிய வளர்ச்சி வங்கியான, ஏ.டி.பி., ஒப்புதல் வழங்கியுள்ளது.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இயங்கி வரும் ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய நாடுகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கு கடன் வழங்குகிறது.கடந்த ஆண்டு இந்த வங்கி இந்திய நகர்ப்புறஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்தவும், எதிர்கால தொற்று நோய் தாக்குதல்களை தடுக்கவும் 2,250 கோடி ரூபாய் கடன் வழங்கியது.
இதைத் தொடர்ந்து இந்தியாவுக்கு கொரோனா தடுப்பூசி மருந்தை கொள்முதல் செய்வதற்காக 11 ஆயிரத்து 185 கோடி ரூபாய் கடன் வழங்க ஏ.டி.பி., ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து ஏ.டி.பி., தலைவர் மசட்சுகு அசகவா கூறியதாவது:வங்கி வழங்கும் கடன், கொரோனா தொற்று மேலும் பரவாமல் மக்களை காக்க அரசுக்கு உதவும். கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் சுகாதாரம், பொருளாதாரம், சமூக வாழ்க்கை ஆகியவற்றை மீட்கும் நடவடிக்கையில் தடுப்பூசி முக்கிய பங்கு வகிக்கிறது.

மக்கள் நலனிற்கு முன்னுரிமை அளித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும், கல்வி நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டு மாணவர்கள் படிப்பை தொடரவும், அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.இதையொட்டி இந்தியா, தடுப்பூசி மருந்தை கொள்முதல் செய்து அனைத்து மக்களுக்கும் செலுத்த வசதியாக கடன் வழங்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X