அரசியல் செய்தி

தமிழ்நாடு

பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் மேம்படுத்த ராமதாஸ் வலியுறுத்தல்

Added : நவ 25, 2021
Share
Advertisement
சென்னை:'பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை மேம்படுத்த சிறப்பு திட்டங்கள் தேவை' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தில் 1,000ஆண் குழந்தைகளுக்கு இணையான பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம், 878 ஆக குறைந்துள்ளது என, தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இது, பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.பெண் குழந்தைகளை போற்றி வணங்கும் வழக்கம் கொண்ட

சென்னை:'பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை மேம்படுத்த சிறப்பு திட்டங்கள் தேவை' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:தமிழகத்தில் 1,000ஆண் குழந்தைகளுக்கு இணையான பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம், 878 ஆக குறைந்துள்ளது என, தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. இது, பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
பெண் குழந்தைகளை போற்றி வணங்கும் வழக்கம் கொண்ட தமிழகத்தில், அவர்களின் பிறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவது ஆரோக்கியமான அறிகுறியல்ல.


சட்டவிரோதம்


கருவிலிருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பங்கள்; ஆண் குழந்தைகளை மட்டும் செயற்கை முறையில் கருத்தரிக்கச் செய்வதற்கான தொழில் நுட்பங்களை உடனே தடை செய்ய வேண்டும்.இந்த விஷயத்தில், சட்டவிரோதமாகச் செயல்படுபவர்கள் எளிதில் தப்பிக்க முடியாதபடி, கடும் தண்டனை வழங்கும் வகையில் சட்டங்கள் திருத்த வேண்டும்.
இவை அனைத்திற்கும் மேலாக, பெண் குழந்தைகளுக்குப் பள்ளிக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை அனைத்தும் இலவசமாக வழங்க வேண்டும். திருமண நிதியுதவி திட்டம், நிபந்தனையின்றி அனைவருக்கும் வழங்க வேண்டும்.ரூ.10 லட்சம்பெண் குழந்தைகள் பிறந்தால் அவர்களின் பெயரில், 10 லட்சம் ரூபாய் வைப்புத் தொகை உள்ளிட்ட ஊக்குவிப்பு கள் அடங்கிய சிறப்பு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X