அரசியல் செய்தி

தமிழ்நாடு

சான்றிதழ்களுக்கு ஜி.எஸ்.டி., : பன்னீர்செல்வம் எதிர்ப்பு

Updated : நவ 26, 2021 | Added : நவ 25, 2021
Share
Advertisement
சென்னை:'கல்விக்கு வரி என்பது எந்த வடிவத்தில் வந்தாலும், அதை தகர்த்தெறிய, தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:தமிழக அரசின் வணிக வரித் துறை அறிவுறுத்தலின்படி, அண்ணா பல்கலை தன் கட்டுப்பாட்டில் வரும், 500க்கும் மேற்பட்ட இணைப்பு கல்லுாரி களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.அதில்,

சென்னை:'கல்விக்கு வரி என்பது எந்த வடிவத்தில் வந்தாலும், அதை தகர்த்தெறிய, தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:தமிழக அரசின் வணிக வரித் துறை அறிவுறுத்தலின்படி, அண்ணா பல்கலை தன் கட்டுப்பாட்டில் வரும், 500க்கும் மேற்பட்ட இணைப்பு கல்லுாரி களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.அதில், 'இடமாற்று சான்றிதழ், உண்மைத்தன்மை சரிபார்ப்பு சான்றிதழ்; மதிப்பெண் பட்டியல், தற்காலிக பட்டச் சான்றிதழ், பட்டச்சான்றிதழ் ஆகியவற்றில் திருத்தம் செய்வதற்கான கட்டணத்திற்கு, 18 சதவீதம் வரி வசூலிக்கப்பட வேண்டும்' என அறிவுறுத்தி உள்ளது.
ஜி.எஸ்.டி., நடைமுறைக்கு வந்து நான்கு ஆண்டுகளான நிலையில், தமிழக அரசின் வணிகவரித் துறை, தற்போது இதுபோன்ற அறிவிப்பை அனுப்பியது அதிர்ச்சி அளிக்கிறது. சான்றிதழ் கட்டணத்தில் ஆரம்பித்து, பிற்காலத்தில் பிற இனங்களுக்கும் நீட்டிக்கப்பட்டால், மாணவர்களுடைய பெற்றோர்களின் கடன் சுமை மேலும் அதிகரிக்கக் கூடும்.
எனவே, வணிக வரித் துறை அறிவிப்பும், அண்ணா பல்கலை சுற்றறிக்கையும் உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும். இது குறித்து, ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் முறையிட்டு, வரி விதிப்புக்கு விதிவிலக்கு பெற வேண்டும்.கல்விக்கு வரி என்பது எந்த வடிவத்தில் வந்தாலும், அதை தகர்த்தெறிய தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல்வர் இதில் தலையிட்டு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X