பொது செய்தி

தமிழ்நாடு

மனித நேய மையத்தில் படித்த ஐந்து பேருக்கு ஐ.ஏ.எஸ்., பணி

Added : நவ 25, 2021
Share
Advertisement
சென்னை:மனித நேயம் ஐ.ஏ.எஸ்., கட்டணமில்லா கல்வியகத்தில் படித்த மாணவர்களில், ஐந்து பேருக்கு ஐ.ஏ.எஸ்., பணி ஒதுக்கப்பட்டுள்ளது. 12பேருக்கு ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியும், அவரது குடும்பத்தினரும், ஏழை மக்களுக்கு உதவ, 2005ல் மனித நேய அறக்கட்டளையை துவக்கினர். அதன் சார்பில், மனித நேயம் ஐ.ஏ.எஸ்., கட்டணமில்லா கல்வியகத்தை நடத்தி

சென்னை:மனித நேயம் ஐ.ஏ.எஸ்., கட்டணமில்லா கல்வியகத்தில் படித்த மாணவர்களில், ஐந்து பேருக்கு ஐ.ஏ.எஸ்., பணி ஒதுக்கப்பட்டுள்ளது. 12பேருக்கு ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியும், அவரது குடும்பத்தினரும், ஏழை மக்களுக்கு உதவ, 2005ல் மனித நேய அறக்கட்டளையை துவக்கினர். அதன் சார்பில், மனித நேயம் ஐ.ஏ.எஸ்., கட்டணமில்லா கல்வியகத்தை நடத்தி வருகின்றனர்.கடந்த ஐந்து ஆண்டுகளில் 3,582 மாணவ - மாணவியர், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று, மாநில மற்றும் தேசிய அளவில் உயர் பதவிகளில் உள்ளனர்.
2020 - 21ம் ஆண்டுக்காக, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற மத்திய அரசு பணிகளுக்கான தேர்வு அறிவிப்பு, 2020 பிப்., 12ல் வெளியிடப்பட்டது.தேர்வு எழுத தகுதியுள்ள மாணவ - மாணவியர், மனித நேயம் இலவச பயிற்சி மையத்தில் சேர்க்கப்பட்டனர். முதல் நிலைத் தேர்வு முடிவுகள், கடந்த ஆண்டு அக்., 23ல் வெளியிடப்பட்டது.
இதில் தேர்ச்சி பெற்றவர்கள், முதன்மைத் தேர்வில் பங்கேற்க, இலவசமாக அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. ஜனவரியில் தேர்வு நடத்தப்பட்டு, மார்ச் 23ல் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு, ஆகஸ்ட் மாதம் நேர்முகத் தேர்வு நடந்தது.இதில், எட்டு மாணவியர், 11 மாணவர்கள் வெற்றி பெற்றனர்.
இவர்களில், கோவையைச் சேர்ந்த நாராயண சர்மா, கேத்தரின் சரண்யா, பிரியங்கா, கோபில்லா வித்யாத்ரி, பிரதீப் ஆகியோருக்கு ஐ.ஏ.எஸ்., பணி ஒதுக்கப்பட்டது. இது தவிர மூவருக்கு ஐ.பி.எஸ்., பணி; ஒருவருக்கு ஐ.எப்.எஸ்., பணி; ஐந்து பேருக்கு ஐ.ஆர்.எஸ்., பணி; இருவருக்கு ஐ.பி.ஓ.எஸ்., - ஒருவருக்கு ஐ.ஐ.எஸ்., பணி ஒதுக்கப்பட்டது; இருவருக்கு பணி ஒதுக்கப்பட வில்லை. பணி ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு, மனித நேய அறக்கட்டளை நிறுவனத் தலைவர் சைதை துரைசாமி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X