செய்தி செய்தி

தமிழ்நாடு

11ம் கட்ட சிறப்பு முகாம் 43 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி

Added : நவ 25, 2021
Share
Advertisement
திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் நேற்று நடந்த, 11 கட்ட தடுப்பூசி முகாமில், 43 ஆயிரத்து, 796 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை, பத்து மெகா தடுப்பூசி முகாம்களில், 17 லட்சத்து, 35 ஆயிரத்து, 628 ஆண்கள், எட்டு லட்சத்து, 20 ஆயிரத்து, 798 பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது. நேற்று, 11ம் கட்ட முகாம் மாவட்டத்தின், 645 பகுதிகள், 41 நடமாடும் முகாம்களில்

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில் நேற்று நடந்த, 11 கட்ட தடுப்பூசி முகாமில், 43 ஆயிரத்து, 796 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை, பத்து மெகா தடுப்பூசி முகாம்களில், 17 லட்சத்து, 35 ஆயிரத்து, 628 ஆண்கள், எட்டு லட்சத்து, 20 ஆயிரத்து, 798 பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தது. நேற்று, 11ம் கட்ட முகாம் மாவட்டத்தின், 645 பகுதிகள், 41 நடமாடும் முகாம்களில் காலை, 7:00 முதல், இரவு, 7:00 மணி வரை நடந்தது. தடுப்பூசி செலுத்தும் பணியில் பல்வேறு துறைகளை சேர்ந்த, 2,580 பணியாளர் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்.நேற்று பனியன் நிறுவனங்களில் இருந்து அடையாள அட்டை சகிதமாக பலர் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். காலை முதல் மதியம் வரை சுறுசுறுப்பாக இருந்த முகாம், மாலையில் வெறிச்சோடியது. நேற்று., 43 ஆயிரத்து, 796 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.அடுத்த முகாம் இதன் தொடர்ச்சியாக நாளை மறுதினம் (28ம் தேதி) ஞாயிறன்று, 12ம் கட்ட தடுப்பூசி முகாம் மாவட்டம் முழுதும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், பொதுமக்கள் கூடும் இடங்களில் நடக்கிறது. இதுவரை தடுப்பூசி செலுத்த தவறியவர்கள் வரும் முகாமில் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X