தமிழ்நாடு

இன்ஸ்பெக்டர் நியமனம் 6 மாதமாக காலதாமதம்

Added : நவ 25, 2021
Share
Advertisement
வெள்ளகோவில்: வெள்ளகோவில் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஆறு மாதமாக இன்ஸ்பெக்டர் நியமிக்கப்படவில்லை.வெள்ளகோவில் நகராட்சி பகுதியில், 200க்கும் மேற்பட்ட ஓ.இ., ஸ்பின்னிங் மில், எண்ணெய் மில்களில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.கோவை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அமைந்துள்ள இப்பகுதியில், அடிக்கடி சாலை விபத்து ஏற்படுகிறது. வாகன

வெள்ளகோவில்: வெள்ளகோவில் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஆறு மாதமாக இன்ஸ்பெக்டர் நியமிக்கப்படவில்லை.வெள்ளகோவில் நகராட்சி பகுதியில், 200க்கும் மேற்பட்ட ஓ.இ., ஸ்பின்னிங் மில், எண்ணெய் மில்களில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புலம் பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.கோவை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அமைந்துள்ள இப்பகுதியில், அடிக்கடி சாலை விபத்து ஏற்படுகிறது. வாகன விபத்தில் இறப்பு மற்றும் கொலை, கொள்ளை, நகை திருட்டு, வாகனங்கள் காணாமல் போவது என குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்த பார்த்திபன் கடந்த ஆறு மாதங்களுக்கு முன், எஸ்.பி., அலுவலகத்துக்கு மாற்றப்பட்டார். எஸ்.ஐ., விஜயபாஸ்கர், தாராபுரம் ஸ்டேஷனுக்கு மாறுதலாகி சென்று விட்டார்.அதிகாரிகள் இல்லாததால், வெள்ளகோவில் போலீஸ் ஸ்டேஷனில் வழக்கமான பணிகளும், ரோந்து பணிகளும் சுணக்கம் அடைந்து விட்டது.எனவே, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் குற்றச்சம்பவங்கள் தடுப்பு பணி ரோந்து ஆகியவற்றை கண்காணித்து நிர்வகிக்க, உடனே இன்ஸ்பெக்டர் பணியிடத்தை நிரப்ப வேண்டுமென, பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X