பொது செய்தி

தமிழ்நாடு

சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் புதிதாக 1.01 லட்சம் பேருக்கு ஓய்வூதியம்

Updated : நவ 27, 2021 | Added : நவ 25, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை :சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ், புதிதாக 1.01 லட்சம் பயனாளிகள் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.தமிழகத்தில் சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ், 33 லட்சத்து 31 ஆயிரத்து 263 பயனாளிகள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இத்திட்டங்களுக்கு, நடப்பு நிதியாண்டுக்கான திருத்திய பட்ஜெட்டில் 4,807.56 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.தற்போது, சமூக
சமூக பாதுகாப்பு திட்டங்கள், 1.01 லட்சம்  , ஓய்வூதியம்

சென்னை :சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ், புதிதாக 1.01 லட்சம் பயனாளிகள் ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

தமிழகத்தில் சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ், 33 லட்சத்து 31 ஆயிரத்து 263 பயனாளிகள் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். இத்திட்டங்களுக்கு, நடப்பு நிதியாண்டுக்கான திருத்திய பட்ஜெட்டில் 4,807.56 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.தற்போது, சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ், ஓய்வூதியம் கோரி புதிதாக வரப்பெற்ற விண்ணப்பங்களில், 1.01 லட்சம் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கண்டறியப்பட்டனர்.

இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ், 48 ஆயிரத்து 77; இந்திரா காந்தி தேசிய மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 1,359; இந்திரா காந்தி தேசிய விதவைகள் ஓய்வூதிய திட்டத்தின் கீழ், 4,346; மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதிய திட்டத்தில், 14 ஆயிரத்து 739.
ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதிய திட்டத்தில், 28 ஆயிரத்து 209; முதல்வர் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் 2,397; கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்றோர் ஓய்வூதிய திட்டத்தில் 1,732 பேர், 50 வயதுக்கு மேற்பட்ட ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதிய திட்டத்தில் 554; முகாம் வாழ் இலங்கை தமிழர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தில் 61 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மொத்தம் ஒரு லட்சத்து 1,474 பயனாளிகளுக்கு, ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை வழங்குவதற்கு அடையாளமாக, நேற்று தலைமை செயலகத்தில், 10 பயனாளிகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் ஆணைகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன், தலைமை செயலர் இறையன்பு, வருவாய் நிர்வாக ஆணையர் பணீந்திரரெட்டி, வருவாய் துறை செயலர் குமார் ஜெயந்த் மற்றும் அதிகாரிகள்
பங்கேற்றனர்.


ஆதார் எண் அவசியம்



தமிழகத்தில் சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ், பயனாளிகளுக்கு ஓய்வூதியமாக மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.இத்தொகையை பெறும் பயனாளிகள், அடையாள சான்றாக தங்களின் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். தற்போது ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருப்போரிடம், ஆதார் எண் இல்லை என்றால், அவர்கள் உடனடியாக ஆதார் எண் பெற விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பித்ததற்கான ரசீதை சமர்ப்பிக்க வேண்டும். இதுகுறித்து பயனாளிகளிடம், மாவட்ட கலெக்டர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.ஆதார் எண் இல்லாதவர்கள், அதை பெற, மாவட்ட கலெக்டர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக நலத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது, தமிழ்நாடு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.


ஆதார் எண் அவசியம்


தமிழகத்தில் சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ், பயனாளிகளுக்கு ஓய்வூதியமாக மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது.இத்தொகையை பெறும் பயனாளிகள், அடையாள சான்றாக தங்களின் ஆதார் எண்ணை சமர்ப்பிக்க வேண்டும். தற்போது ஓய்வூதியம் பெற்றுக் கொண்டிருப்போரிடம், ஆதார் எண் இல்லை என்றால், அவர்கள் உடனடியாக ஆதார் எண் பெற விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பித்ததற்கான ரசீதை சமர்ப்பிக்க வேண்டும்.
இதுகுறித்து பயனாளிகளிடம், மாவட்ட கலெக்டர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.ஆதார் எண் இல்லாதவர்கள், அதை பெற, மாவட்ட கலெக்டர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக நலத்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது, தமிழ்நாடு அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
26-நவ-202109:18:48 IST Report Abuse
R.RAMACHANDRAN அதிகார வர்கம் ஒவ்வொரு நபரிடம் இருந்தும் ரூபாய் ஐந்தாயிரம் லஞ்சம் பெற்றுக்கொண்டு தகுதியில்லாதவர்களுக்கெல்லாம் ஓய்வூதியம் வழங்குவது சாதனையாக கருதுகின்றனர். கொடுங்கோன்மையான அதிகார வர்க்கத்திற்கு லஞ்சம் வழங்க விரும்பாத எண்ணெய் போன்ற வறுமையிலும் வறுமையானவர்கள் ஓய்வூதியம் பெற தகுதியில்லாதவர்கள்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
26-நவ-202108:28:12 IST Report Abuse
Kasimani Baskaran கடன் வாங்கி விடியல் அரசு மடியல் அரசாகிறது.
Rate this:
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
26-நவ-202101:50:24 IST Report Abuse
Milirvan கழகக்கண்மணிகள், இதற்காக ஏழைஎளியவர்களிடம் "மீட்டர்" போடுவார்கள்.. பொழைக்க வழி செய்யணுமில்லையா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X