சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுக்கடை திறக்க எதிர்ப்பு

Added : நவ 25, 2021
Share
Advertisement
திருப்பூர்: அணைப்பாளையம் பகுதியில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சி சார்பில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.திருப்பூர் மாநகராட்சி, 25வது வார்டு அணைப்பாளையம் பகுதியில், தனியார் இடத்தில் 'டாஸ்மாக்' மதுக்கடை திறக்கப்படுகிறது. இதற்காக, தனியார் நிலத்தில், ஒரு கட்டடம் கட்டப்பட்டது. இதையறிந்த பொதுமக்கள், மதுக்கடை திறக்க அனுமதிக்க கூடாது என

திருப்பூர்: அணைப்பாளையம் பகுதியில் மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சி சார்பில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.திருப்பூர் மாநகராட்சி, 25வது வார்டு அணைப்பாளையம் பகுதியில், தனியார் இடத்தில் 'டாஸ்மாக்' மதுக்கடை திறக்கப்படுகிறது. இதற்காக, தனியார் நிலத்தில், ஒரு கட்டடம் கட்டப்பட்டது. இதையறிந்த பொதுமக்கள், மதுக்கடை திறக்க அனுமதிக்க கூடாது என வலியுறுத்தி, அனைத்து கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.அதன்பின், நேற்று காலை மதுக்கடை அமையவுள்ள இடத்தின் முன், பல்வேறு கட்சியினர், பொது நல அமைப்பினர், குடியிருப்போர் நல சங்கத்தினர், ஏராளமான பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பெண்கள் கோரிக்கை பதாகைகளை ஏந்தியவாறு, கோஷம் எழுப்பி தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:இப்பகுதியில் கோவில்கள் உள்ளன. குடியிருப்பு மற்றும் பனியன் நிறுவனங்கள் உள்ளன. ஏராளமான வாகனங்கள் செல்லும் முக்கிய ரோடாக உள்ளது. மதுக்கடை அமைந்தால் தேவையற்ற பிரச்னைகள் ஏற்படும். மாவட்ட நிர்வாகம் மற்றும் 'டாஸ்மாக்' நிர்வாகமும் எங்கள் கோரிக்கையை ஏற்று, முயற்சியை கைவிட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X