தமிழ்நாடு

பா.ஜ., சார்பில் இன்று மாட்டு வண்டி போராட்டம்

Added : நவ 25, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும்படி, தமிழக அரசை வலியுறுத்தி, பா.ஜ., விவசாய அணி சார்பில், இன்று அனைத்து மாவட்டங்களிலும் மாட்டு வண்டி பயண போராட்டம் நடக்கிறது.மத்திய அரசு, இம்மாதம் 3ம் தேதி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்ததை அடுத்து, அடுத்த நாளான தீபாவளியன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 10 ரூபாயும் குறைந்தது.அதை பின்பற்றி, பல மாநில

சென்னை:பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும்படி, தமிழக அரசை வலியுறுத்தி, பா.ஜ., விவசாய அணி சார்பில், இன்று அனைத்து மாவட்டங்களிலும் மாட்டு வண்டி பயண போராட்டம் நடக்கிறது.
மத்திய அரசு, இம்மாதம் 3ம் தேதி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்ததை அடுத்து, அடுத்த நாளான தீபாவளியன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 10 ரூபாயும் குறைந்தது.அதை பின்பற்றி, பல மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை குறைத்ததால், அம்மாநிலங்களில் ஒட்டுமொத்தமாக பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு, 17 ரூபாய் வரை குறைந்துள்ளது.
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மாநில அரசை வலியுறுத்தி, தொடர் போராட்டம் நடத்துமாறு கட்சியினருக்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டு உள்ளார்.
அதன்படி, அக்கட்சியின் இளைஞரணி மற்றும் மகளிரணி சார்பில், 22ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.விவசாய அணி சார்பில், இன்று மாநிலம் முழுதும் மாட்டு வண்டி பயண போராட்டம் நடக்கிறது. நாளை சிறுபான்மையினர், வழக்கறிஞர் பிரிவுகள் சார்பிலும்; அதற்கு அடுத்த நாள் எஸ்.சி., - எஸ்.டி., அணி சார்பிலும் போராட்டங்கள் நடக்க உள்ளன.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Milirvan - AKL,நியூ சிலாந்து
26-நவ-202101:45:54 IST Report Abuse
Milirvan இ.. இ .. இப்படியெல்லாம் அறப்போராட்டம் செய்தால், மக்களை திசை திருப்ப இன்னொரு கோவிலை இடிக்க வேண்டி வரும் என்று திராவிடனாய், தானைத்தலைவனாய்.. அறிவுறுத்திக் கொள்கிறேன்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X