செய்தி செய்தி

தமிழ்நாடு

தொழிலாளி தற்கொ: ஆம்புலன்சில் உ.பி., பயணித்த சடலம்

Added : நவ 25, 2021
Share
Advertisement
அவிநாசி; அவிநாசியில் உள்ள பனியன் நிறுவனத்தில், தற்கொலை செய்து கொண்ட உ.பி., மாநிலத்தை சேர்ந்த பெண் தொழிலாளியின் சடலம், ஆம்புலன்ஸ் மூலம், அவரது சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது.அவிநாசி ஈரோடு சாலை, கைகாட்டிபுதூர் பகுதியில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் செயல்படுகிறது. இங்கு பணிபுரிந்து வந்த உ.பி.. மாநிலம், பல்ராம்பூர் பகுதியை சேர்ந்த நிர்மலா, 27 என்ற பெண் தொழிலாளி, கடந்த, 23ம்



அவிநாசி; அவிநாசியில் உள்ள பனியன் நிறுவனத்தில், தற்கொலை செய்து கொண்ட உ.பி., மாநிலத்தை சேர்ந்த பெண் தொழிலாளியின் சடலம், ஆம்புலன்ஸ் மூலம், அவரது சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டது.அவிநாசி ஈரோடு சாலை, கைகாட்டிபுதூர் பகுதியில் பனியன் ஏற்றுமதி நிறுவனம் செயல்படுகிறது. இங்கு பணிபுரிந்து வந்த உ.பி.. மாநிலம், பல்ராம்பூர் பகுதியை சேர்ந்த நிர்மலா, 27 என்ற பெண் தொழிலாளி, கடந்த, 23ம் தேதி மாலை விடுதி அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சடலம், அவிநாசி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டது.இதுகுறித்து. உ.பி.,யில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து, பல்ராம்பூர் போலீசார் மூலம், நிர்மலாவின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.ஆனால், அத்தனை தொலைவு பயணித்து வருவதற்கான சூழலில் அவர்களது குடும்பத்தினர் இல்லாததால், நிர்மலாவின் சடலத்தை, அவிநாசியில் இருந்து தருவித்து தருமாறு, பல்ராம்பூர் போலீசரிடம் நிர்மலாவின் பெற்றோர் கூறியுள்ளனர்.பெற்றோர் அடிப்படையில், பிரேத பரிசோதனைக்கு அவரின் சடலம், தனியார் ஆம்புலன்ஸ் மூலம், உ.பி., மாநிலத்தில் உள்ள அவரது வீட்டுக்கு, நேற்று முன்தினம் இரவு அனுப்பி வைக்கப்பட்டடது. நிர்மலாவுடன் பணியாற்றும் தொழிலாளர்கள், கண்ணீர் விட்டு கதறியது அனைவரையும் கலங்க வைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X