முழு அடைப்புக்கு இந்திய கம்யூ., ஆதரவு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

முழு அடைப்புக்கு இந்திய கம்யூ., ஆதரவு

Added : நவ 25, 2021
Share
திருப்பூர்: பின்னலாடை துறையினரின் முழு அடைப்பு போராட்டத்துக்கு, இந்திய கம்யூ., ஆதரவு தெரிவித்துள்ளது.இது குறித்து, அக்கட்சி சார்பில், வெளியிட்டுள்ள அறிக்கை:நுால் விலை உயர்வால், திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறை மற்றும் கைத்தறி, விசைத்தறி தொழில்கள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பருத்தி மற்றும் நுால், வரம்பற்ற முறையில்

திருப்பூர்: பின்னலாடை துறையினரின் முழு அடைப்பு போராட்டத்துக்கு, இந்திய கம்யூ., ஆதரவு தெரிவித்துள்ளது.இது குறித்து, அக்கட்சி சார்பில், வெளியிட்டுள்ள அறிக்கை:நுால் விலை உயர்வால், திருப்பூர் பின்னலாடை உற்பத்தி துறை மற்றும் கைத்தறி, விசைத்தறி தொழில்கள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பருத்தி மற்றும் நுால், வரம்பற்ற முறையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதே இதற்கு காரணம்.தமிழகத்தில் இயங்கிவரும் தேசிய பஞ்சாலைகளை, தமிழக அரசே ஏற்று நடத்தவேண்டும். இதுகுறித்து எம்.பி., சுப்பராயன் வலியுறுத்தி வரும் அம்சங்களை, அரசு பரிசீலிக்க வேண்டும்.பஞ்சு, நுால் விலை உயர்வை கண்டித்து பின்னலாடை துறையினர் நடத்தும் முழு அடைப்பு போராட்டத்துக்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழு ஆதரவு அளிக்கிறது. மத்திய அரசு தலையிட்டு, ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு சீரான விலைக்கு நுால் கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X