செய்தி செய்தி

தமிழ்நாடு

'அட்மா' திட்ட சிறப்பு முகாம் விவசாயிக்கு விழிப்புணர்வு

Added : நவ 25, 2021
Share
Advertisement
திருப்பூர்: வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தில், விவசாயிகள் விழிப்புணர்வு கூட்டம், தொரவலுாரில் நேற்று நடந்தது.வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அருள்வடிவு தலைமை வகித்தார். இவர், நுண்ணுயிர் பாசனம், பயிர் காப்பீடு குறித்து விளக்கம் அளித்தார். பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலைய மண்ணியல் பேராசிரியர் தேன்மொழி, தென்னையில் நுண்ணுாட்ட மேலாண்மை, பூச்சி

திருப்பூர்: வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தில், விவசாயிகள் விழிப்புணர்வு கூட்டம், தொரவலுாரில் நேற்று நடந்தது.வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அருள்வடிவு தலைமை வகித்தார்.
இவர், நுண்ணுயிர் பாசனம், பயிர் காப்பீடு குறித்து விளக்கம் அளித்தார். பொங்கலுார் வேளாண் அறிவியல் நிலைய மண்ணியல் பேராசிரியர் தேன்மொழி, தென்னையில் நுண்ணுாட்ட மேலாண்மை, பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து பேசினார்.குளிர் பதன கிடங்கு, வேளாண் விளை பொருட்களை இணையதளம் மூலம் விற்பனை செய்வது, கூட்டுப்பண்ணையம் குறித்து, வேளாண் வணிகம் மற்றும் விற்பனை துறை அலுவலர் ரம்யாதேவி விளக்கி பேசினார். எரிசக்தி துறை அலுவலர் முரளிதரன், சூரிய ஒளி மின் உற்பத்தி திட்ட மானியங்கள் குறித்து பேசினார். வேளாண்மை துறை மற்றும் அட்மா அலுவலர்கள், விவசாய கண்காட்சி நடத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X