செய்தி செய்தி

தமிழ்நாடு

'றெக்க கட்டி சைக்கிளில் பறக்கலாம்' ஆரோக்கியம் பேண எளிய வழி

Added : நவ 25, 2021
Share
Advertisement
பல்லடம்: பல்லடத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கிராமங்கள் தோறும் சென்று, சைக்கிள் பயணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.பல்லடம் தாலூகா சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை கூறியதாவது:வாகன போக்குவரத்து நெரிசல், காற்று மாசு, விலைவாசி உயர்வு காரணமாக, வாகனங்களில் செல்வது என்பது மிகவும் சவாலான ஒன்றாக உள்ளது. கடந்த காலங்களை போன்று சைக்கிளில்

பல்லடம்: பல்லடத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கிராமங்கள் தோறும் சென்று, சைக்கிள் பயணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.பல்லடம் தாலூகா சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை கூறியதாவது:வாகன போக்குவரத்து நெரிசல், காற்று மாசு, விலைவாசி உயர்வு காரணமாக, வாகனங்களில் செல்வது என்பது மிகவும் சவாலான ஒன்றாக உள்ளது. கடந்த காலங்களை போன்று சைக்கிளில் செல்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படும். இதை வலியுறுத்தி, சில தினங்களுக்கு முன் சைக்கிள் பேரணி நடத்தினோம்.வாரந்தோறும், ஞாயிற்றுக்கிழமைகளில், கிராமங்களுக்கு சென்று, பொதுமக்களிடம் சைக்கிள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தை துவக்கி உள்ளோம். சைக்கிளில் கூட்டமாக செல்வதை கண்டு, பலரும் இணைந்து பயணிக்கின்றனர். இவ்வாறு, அவர்கள் கூறினர்.அம்மாபாளையம், மாணிக்காபுரம் கிராமங்களுக்கு சென்ற சமூக ஆர்வலர்கள், பொதுமக்களுக்கு நோட்டீஸ் வினியோகித்து, சைக்கிள் பயன்படுத்துமாறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X