மாநில போட்டியில் வெற்றி பெற்ற மாணவருக்கு பாராட்டு

Added : நவ 25, 2021
Share
Advertisement
திருப்பூர்: மாநில போட்டியில் வெற்றி பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவருக்கு, தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 6ம் வகுப்பு மாணவர் யோகேஷ், மாநில கராத்தே போட்டியில் கறுப்பு பட்டயம் வென்றார். 10ம் வகுப்பு மாணவர் பரத் கராத்தே போட்டியில் இரண்டாமிடம்.மாணவர் செல்வக்குமார், 800 மற்றும், 1,500 மீ., தடகள போட்டியில்

திருப்பூர்: மாநில போட்டியில் வெற்றி பெற்ற மாநகராட்சி பள்ளி மாணவருக்கு, தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 6ம் வகுப்பு மாணவர் யோகேஷ், மாநில கராத்தே போட்டியில் கறுப்பு பட்டயம் வென்றார். 10ம் வகுப்பு மாணவர் பரத் கராத்தே போட்டியில் இரண்டாமிடம்.மாணவர் செல்வக்குமார், 800 மற்றும், 1,500 மீ., தடகள போட்டியில் இரண்டாமிடம், கே.செல்வக்குமார், 1,500 மீ., தடகளத்தில் இரண்டாமிடம். ஆறாம் வகுப்பு மாணவர், கோகுலகண்ணன், குத்துச்சண்டை போட்டியில் முதலிடம் பெற்று தங்க பதக்கம், தர்ஷன் இரண்டாமிடம் பெற்றனர்.பிளஸ் 2 மாணவர் மனோஜ்குமார், 110 மீ., தடைதாண்டும் ஓட்டத்தில் மூன்றாமிடம் மற்றும் 400 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் முதலிடம், பிளஸ் 2 மாணவர் சுஜித் டேக்வாண்டோவில் முதலிடம், எட்டாம் வகுப்பு மாணவர்கள் ஸ்ரீ தர்னேஷ், அன்பு, தடகளம், 600 மீ., இரண்டாமிடம் பெற்றனர்.இவ்வாறு, மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் பழனிசாமி, விளையாட்டு ஆசிரியர் சசிக்குமார், பயிற்சியாளர்கள் கேசவன், பாலகிருஷ்ணன், சுரேஷ்ராஜ் ஆகியோர் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X