அரசியல் செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் போட்டி அ.தி.மு.க.,வில் விருப்ப மனு

Added : நவ 25, 2021
Share
Advertisement
திருப்பூர்: தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க., வினர், இன்று முதல் விருப்ப மனு பெறலாம்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. வெற்றி வாய்ப்பு கைப்பற்ற, சரியான நபர்களை தேர்வு செய்து, களமிறக்க அரசியல் கட்சியினர் முனைப்பு காட்டி வருகின்றனர்.தேர்தலில் போட்டியிட விரும்பும், மாநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட அ.தி.மு.க.,வினர், இன்று முதல், விருப்ப

திருப்பூர்: தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க., வினர், இன்று முதல் விருப்ப மனு பெறலாம்.நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. வெற்றி வாய்ப்பு கைப்பற்ற, சரியான நபர்களை தேர்வு செய்து, களமிறக்க அரசியல் கட்சியினர் முனைப்பு காட்டி வருகின்றனர்.தேர்தலில் போட்டியிட விரும்பும், மாநகர் மாவட்டத்துக்கு உட்பட்ட அ.தி.மு.க.,வினர், இன்று முதல், விருப்ப மனுக்களை பெற்று கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் வெளியிட்ட அறிக்கையில், திருப்பூர் - காங்கயம் ரோட்டில் உள்ள அம்மா மாளிகையில், இன்று முதல் வரும் 29ம் தேதி வரை, காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை விண்ணப்ப படிவம் பெறலாம். மாநகராட்சி கவுன்சிலருக்கு, 5 ஆயிரம் ரூபாய்; நகராட்சி கவுன்சிலருக்கு 2,500 ; பேரூராட்சி கவுன்சிலருக்கு போட்டியிட 1,500 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்,' என கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X