செய்தி செய்தி

தமிழ்நாடு

85 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி

Added : நவ 25, 2021
Share
Advertisement
திருப்பூர்: 'திருப்பூர் மாவட்டத்தில் 85 சதவீதம் பேர் முதல் கட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக,' அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.'மக்களை நாடிடும் நிகழ்ச்சி' என்ற தலைப்பில் நேற்று திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் சாமிநாதன், மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் மற்றும் அலுவலர்கள் இதில்

திருப்பூர்: 'திருப்பூர் மாவட்டத்தில் 85 சதவீதம் பேர் முதல் கட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக,' அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.'மக்களை நாடிடும் நிகழ்ச்சி' என்ற தலைப்பில் நேற்று திருப்பூர் மாநகராட்சி பகுதியில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர் சாமிநாதன், மாநகராட்சி கமிஷனர் கிராந்திகுமார் மற்றும் அலுவலர்கள் இதில் பங்கேற்றனர்.பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசுக்கு இது சோதனை காலமாக உள்ளது.அரசு பதவியேற்றது முதல் கொரோனா பாதிப்பை தொடர்ந்து தற்போது மழை வெள்ளம் பாதிப்பு என ஏற்பட்டுள்ளது. மக்களின் பிரச்னைகள் தீர்ப்பதில் முன்னுரிமை கொடுத்து செயல்பட வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டதன் பேரில், மருத்துவ முகாம்கள், நிவாரண பணிகள், குறை கேட்பு முகாம்கள் நடத்தப்படுகிறது.கொரோனா பாதிப்பு முற்றிலும் குறையவில்லை. மக்கள் எச்சரிக்கை மற்றும் பாதுகாப்புடன் கவனமாக இருக்க வேண்டும்.அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். திருப்பூர் மவட்டத்தில் 85 சதவீதம் பேர் முதல் தவணையும், 35 சதவீதம் பேர் இரண்டாவது தவணையும் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X