5 மலை கோவில்களில் ரோப் கார் வசதி?சாத்தியக்கூறு ஆய்வு செய்வதாக தகவல்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

5 மலை கோவில்களில் 'ரோப் கார்' வசதி?சாத்தியக்கூறு ஆய்வு செய்வதாக தகவல்

Added : நவ 25, 2021
Share
சென்னை:திருச்சி, திருத்தணி உள்ளிட்ட ஐந்து மலை கோவில்களில், 'ரோப் கார்' வசதி செய்ய, சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்வதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெகநாத் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'பழநி கோவிலில் ரோப் கார் வசதி உள்ளது. தமிழகத்தில் உள்ள 33 மலை கோவில்களில், பக்தர்கள் வசதிக்காக கேபிள் ரோப் கார் வசதி ஏற்படுத்த

சென்னை:திருச்சி, திருத்தணி உள்ளிட்ட ஐந்து மலை கோவில்களில், 'ரோப் கார்' வசதி செய்ய, சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்வதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜெகநாத் என்பவர் தாக்கல் செய்த மனுவில், 'பழநி கோவிலில் ரோப் கார் வசதி உள்ளது. தமிழகத்தில் உள்ள 33 மலை கோவில்களில், பக்தர்கள் வசதிக்காக கேபிள் ரோப் கார் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என தெரிவித்திருந்தார்.
மனு, பொறுப்பு தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, ''சோளிங்கர் மற்றும் அய்யன்மலையில், ரோப் கார் அமைக்கும் பணி மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
''திருத்தணி, திருச்செங்கோடு, திருச்சி மலைக்கோட்டை, திருநீர்மலை மற்றும் திருக்கழுகுன்றம் கோவில்களில் ரோப் கார் வசதி செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்கிறோம். சில இடங்களில் பஸ் வசதி உள்ளது,'' என்றார்.
இதையடுத்து, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவில், 'சாத்தியக்கூறு உள்ள இடங்களில், ரோப் கார் வசதி மேற்கொள்வது குறித்து, அரசுக்கு மனுதாரர் மனு அனுப்பலாம்; சாத்தியக்கூறு மற்றும் இதர அம்சங்களைப் பொறுத்து, அரசு முடிவு செய்யும்' என தெரிவித்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X