பாரதியார் பல்கலை அனைத்து கல்லுாரி விளையாட்டு போட்டி

Added : நவ 26, 2021
Share
Advertisement
கோவை: பாரதியார் பல்கலை அனைத்து கல்லுாரி விளையாட்டு போட்டிகளுக்கான, ஆண்டு பொதுக்குழு கூட்டம் பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில், 2021 - 22ம் ஆண்டுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பல்கலையில் கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், கபடி ஆகிய விளையாட்டுகளுக்கு, 140 கல்லுாரிகளை நான்கு பிரிவுகளாக பிரித்து போட்டிகள் நடத்த

கோவை: பாரதியார் பல்கலை அனைத்து கல்லுாரி விளையாட்டு போட்டிகளுக்கான, ஆண்டு பொதுக்குழு கூட்டம் பல்கலை வளாகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில், 2021 - 22ம் ஆண்டுக்கான விளையாட்டு போட்டிகள் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பல்கலையில் கால்பந்து, கிரிக்கெட், வாலிபால், கபடி ஆகிய விளையாட்டுகளுக்கு, 140 கல்லுாரிகளை நான்கு பிரிவுகளாக பிரித்து போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டது.இதுதவிர, கைப்பந்து, பேட்மின்டன், தடகளம், டென்னிஸ், நீச்சல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை, குறிப்பிட்ட காலத்துக்குள் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.போட்டியின் போது அனைத்து பல்கலை கல்லுாரிகளில் இருந்தும் பல்கலைக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. நடப்பாண்டுக்கான விளையாட்டு போட்டிகளை, விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டது. முன்னதாக கூட்டத்துக்கு, பல்கலை துணைவேந்தர் காளிராஜ் தலைமை வகித்தார். பதிவாளர் முருகவேல் முன்னிலை வகித்தார். உடற்கல்வி இயக்குனர் ராஜேஸ்வரன் ஆண்டறிக்கை வாசித்தார். உடற்கல்வி துறை இணை பேராசிரியர் அண்ணாதுரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X