சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரேஷனில் காய்கறி விற்பனை ஊழியர்கள் போர்க்கொடி

Added : நவ 26, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:ஏற்கனவே விற்பனையாகாத வெங்காயத்திற்கு பணம் வசூலித்ததால், தற்போது ரேஷன் கடைகளில் காய்கறி விற்கும் அரசின் முடிவிற்கு எதிராக, ரேஷன் கடை ஊழியர்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.கூட்டுறவு துறை முடிவுதமிழகத்தில் காய்கறி விலை உயர்வை கட்டுப்படுத்த, நகர்ப்புறங்களில் குறிப்பிட்ட இடங்களில் உள்ள ரேஷன் கடைகளில் வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறி களை விற்க, கூட்டுறவு

சென்னை:ஏற்கனவே விற்பனையாகாத வெங்காயத்திற்கு பணம் வசூலித்ததால், தற்போது ரேஷன் கடைகளில் காய்கறி விற்கும் அரசின் முடிவிற்கு எதிராக, ரேஷன் கடை ஊழியர்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.
கூட்டுறவு துறை முடிவுதமிழகத்தில் காய்கறி விலை உயர்வை கட்டுப்படுத்த, நகர்ப்புறங்களில் குறிப்பிட்ட இடங்களில் உள்ள ரேஷன் கடைகளில் வெங்காயம், தக்காளி உள்ளிட்ட காய்கறி களை விற்க, கூட்டுறவு துறை முடிவு செய்துள்ளது.இதற்கு, ரேஷன் கடை ஊழியர்களிடம் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இது குறித்து அவர்கள் கூறியதாவது:ஓராண்டுக்கு முன் வெங்காயம் விலை உயர்ந்தபோது, ரேஷன் கடைகளில் வெங்காயம் விற்கப்பட்டது. அதிக ஈரப்பதத்துடன் அழுகிய வெங்காயங்கள், கடைகளுக்கு அனுப்பப்பட்டன; அவற்றை கார்டுதாரர்களும், மக்களும் வாங்கவில்லை. அதற்கான தொகையை, ரேஷன் ஊழியர்களிடம் அதிகாரிகள் வசூலித்தனர். அதே நிலை தற்போது தக்காளிக்கும் ஏற்பட வாய்ப்புள்ளது.


பணிச்சுமை

மே, ஜூனில் ஊரடங்கின் போது பஸ்கள் இயக்கப்படாத நிலையில், ரேஷன் ஊழியர்கள் சொந்த வாகனங்களில் வேலைக்கு வந்தனர். அவர்களுக்கு இதுவரை பயணச் செலவு, ஊக்கத்தொகை வழங்கவில்லை. கடைகளிலும் பணிச்சுமை அதிகரித்துள்ளது.இந்த தொகையை வழங்குவதுடன், விற்பனையாகாத காய்கறிக்கான பணம் ஊழியர்களிடம் வசூலிக்கப்படாது என, அதிகாரிகள் தெரிவித்தால் மட்டுமே காய்கறி விற்பனையில் ஈடுபடுவோம்; இல்லையெனில் ஒத்துழைப்பு அளிக்க மாட்டோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
26-நவ-202110:06:03 IST Report Abuse
R.RAMACHANDRAN மக்கள் ரேஷன் கடைகளில் இலவசம் என்றால் எதையும் தவறாமல் வாங்கிக்கொள்கின்றனர்.வெளி சந்தை விலை என்றால் தரம் சரி இல்லை என ஏதாவது சொல்லி வாங்கமாட்டார்கள்.இவர்களை காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் அழுகும் பொருட்களை எல்லாம் அடிமைகளாக நடத்தப்படும் பணியாளர்கள் தலையில் கட்டுவது கொடுமையிலும் கொடுமையானது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X