செய்தி செய்தி

தமிழ்நாடு

63 இடங்களில் மருத்துவ நல மையம் மாநகராட்சி பகுதியில் அமைகிறது

Added : நவ 26, 2021
Share
Advertisement
கோவை: கோவை நகர் பகுதியில், ரூ.15.75 கோடியில், 63 இடங்களில் மருத்துவ நல மையங்கள் கட்டப்பட உள்ளன. 2022, மார்ச்சுக்குள் கட்டி முடிக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது.கர்ப்பிணிகளுக்கான சேவையை மேம்படுத்தும் வகையில், மருத்துவ நல மையங்கள் ஏற்படுத்த, மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.அதன்படி, 15 ஆயிரம் மக்கள் தொகையுள்ள ஒவ்வொரு பகுதியையும் தேர்வு செய்து, அம்மையங்கள் ஏற்படுத்தும் வேலையில்,

கோவை: கோவை நகர் பகுதியில், ரூ.15.75 கோடியில், 63 இடங்களில் மருத்துவ நல மையங்கள் கட்டப்பட உள்ளன. 2022, மார்ச்சுக்குள் கட்டி முடிக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது.கர்ப்பிணிகளுக்கான சேவையை மேம்படுத்தும் வகையில், மருத்துவ நல மையங்கள் ஏற்படுத்த, மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.அதன்படி, 15 ஆயிரம் மக்கள் தொகையுள்ள ஒவ்வொரு பகுதியையும் தேர்வு செய்து, அம்மையங்கள் ஏற்படுத்தும் வேலையில், மாநகராட்சி சுகாதாரப் பிரிவு இறங்கியுள்ளது.கோவை மாநகராட்சியில், 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. மருத்துவ பரிசோதனை, கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை, தடுப்பூசி போடுதல், பிரசவம் பார்த்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் பார்க்கப்படுகின்றன.தற்போது, 'வீடு தேடி மருத்துவம்' திட்டம் துவக்கப்பட்டு, இரு மாதங்களுக்கு தேவையான 'மருந்து பெட்டகம்' வழங்கப்படுகிறது.கர்ப்பிணிகளின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தும் வகையில், தலா, 25 லட்சம் ரூபாய் மதிப்பில், 63 இடங்களில், ரூ.15.75 கோடியில் மருத்துவ நல மையங்கள் கட்டப்பட உள்ளன. இது தவிர, 3 மருத்துவ ஆய்வு கூடமும் கட்டப்பட இருக்கிறது.மாநகராட்சி சுகாதாரப்பிரிவினர் கூறுகையில், 'கர்ப்பிணிகளின் விபரங்களை பதிவு செய்து, 'பிக்மி' எண் வழங்குவது; தொடர் பரிசோதனை செய்வது; தாய்-சேய் நலம் பராமரித்தல்; அவர்களது ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்தல்; யோகா பயிற்சி அளித்தல்; தடுப்பூசி போடுதல், குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். '2022, மார்ச்சுக்குள், 63 இடங்களிலும் மையங்கள் கட்டி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 'இன்னும், 15 இடங்கள் மட்டும் தேர்வு செய்ய வேண்டியுள்ளது. விரைவில் பணிகள் மேற்கொள்ளப்படும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X