தமிழ்நாடு

மாற்று வழியிருக்கு... ஆனா ஆயிரம் குழியிருக்கு! லாலிரோடு நெரிசலுக்கு தீர்வு காண்பாரா அமைச்சர்?

Added : நவ 26, 2021
Share
Advertisement
கோவை: லாலி ரோடு சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு, பூசாரிபாளையம் ரோடு மற்றும் சீரநாயக்கன்பாளையம் ரோட்டைச் சீரமைத்து, மாற்று வழி ஏற்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.கோவை, தடாகம் ரோட்டிலுள்ள லாலி ரோடு சந்திப்பு, அதிக போக்குவரத்து நெரிசலைச் சந்திக்கும் சந்திப்பாக மாறியுள்ளது. இந்த சந்திப்புப் பகுதியில், மேம்பாலம் கட்டுவதற்கான



கோவை: லாலி ரோடு சந்திப்பில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு, பூசாரிபாளையம் ரோடு மற்றும் சீரநாயக்கன்பாளையம் ரோட்டைச் சீரமைத்து, மாற்று வழி ஏற்படுத்த வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.கோவை, தடாகம் ரோட்டிலுள்ள லாலி ரோடு சந்திப்பு, அதிக போக்குவரத்து நெரிசலைச் சந்திக்கும் சந்திப்பாக மாறியுள்ளது. இந்த சந்திப்புப் பகுதியில், மேம்பாலம் கட்டுவதற்கான திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது.குறைந்தபட்சம், மருதமலை ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள், சாய்பாபா காலனி, வேலாண்டிபாளையம், கோவில் மேடு பகுதிகளுக்குச் செல்லும் வகையில், வேளாண் பல்கலை இடத்தை எடுத்து ரோட்டை அகலப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையும் கிடப்பில் உள்ளது.நெரிசல் அதிகரிக்கிறதுதடாகம் ரோட்டிலிருந்து கவுலி பிரவுன் ரோடு வழியாக, ஆர்.எஸ்.புரம் மற்றும் மேட்டுப்பாளையம் ரோட்டுக்குச் செல்வோர், இந்த சந்திப்பில் காத்திருக்காத வகையில், வனக்கல்லுாரி இடத்தை எடுத்து, அந்த வளைவை விரிவுபடுத்தும் திட்டமும், கிடப்பில் கிடக்கிறது. அந்த சந்திப்பில் நாளுக்கு நாள் நெரிசல் அதிகரித்து வருகிறது.இதனால் வடவள்ளி, பி.என்.புதுார் மற்றும் மருதமலை பகுதிகளிலிருந்து வாகனங்களில் வருவோர், லாலி ரோடு சந்திப்புக்குச் செல்லாமல் தவிர்ப்பதற்கு, மாற்று வழியைத் தயார் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.மாற்று வழி உள்ளதுவேளாண் பல்கலையை ஒட்டியுள்ள சீரநாயக்கன்பாளையம் ரோட்டில், கிருஷ்ணாம்பதி குளத்தைக் கடந்து, பூசாரிபாளையம் வழியாக தடாகம் ரோட்டிற்குச் செல்ல மாற்று வழியுள்ளது.இதில், கிருஷ்ணாம்பதி குளம் வரையிலான ரோடு, 'பேட்ச் ஒர்க்' செய்தாலே, ஓரளவுக்குப் பயன்படுத்தும் நிலையில் உள்ளது. ஆனால் குளத்தை ஒட்டியுள்ள 400 மீட்டர் துார ரோடு, முற்றிலும் குதறப்பட்டுள்ளது.அதேபோன்று குளத்திலிருந்து தடாகம் ரோடு வரையிலான தொண்டாமுத்துார் ரோட்டில் இரண்டு கி.மீ.,ரோடு, பெரிய பெரிய குழிகளுடன் மிரட்டுகிறது. இதனால், வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டியுள்ளது.இந்த ரோட்டைச் சீரமைப்பதுடன், குளத்தை ஒட்டியுள்ள சீரநாயக்கன்பாளையம் ரோட்டை புதிதாகப் போடுவதும் அவசியம். இவற்றில் தொண்டாமுத்துார் ரோடு, மாநில நெடுஞ்சாலைத்துறையின் பராமரிப்பில் உள்ளது.சீரநாயக்கன்பாளையம் ரோடு, மாநகராட்சி வசமுள்ளது. இரு துறைகளையும் ஒருங்கிணைத்து ஒரே நேரத்தில், இரண்டு ரோடுகளையும் சீரமைத்தால், லாலி ரோடு சந்திப்பில் கொஞ்சம் நெரிசல் குறையும். மனது வைப்பாரா மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர்?

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X