ஈச்சனாரி: மாநகராட்சியின், 100வது வார்டுக்குட்பட்ட ஈச்சனாரி பகுதியில் ஆதிதிராவிடர் காலனி உள்ளது. சுமார் இரண்டு ஏக்கர் பரப்பில்,73 வீடுகளில், 400க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.1986ல் ஒவ்வொரு வீடும், முக்கால் சென்ட் இடத்தில், மாநில அரசால் கட்டிக்கொடுக்கப்பட்டது.
கழிவறை கட்டப்படவில்லை.சுற்றுப்பகுதிகளை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வந்தனர். தற்போது பெரும்பாலான நிலங்கள், வீட்டு மனைகளாக மாறிவிட்டன. சுமார், 500 மீட்டர் தொலைவில் ஓடை ஒன்றின் அருகே இயற்கை உபாதையை கழிக்க செல்கின்றனர்.தற்போது இதனருகே டாஸ்மாக் மதுக்கடை ஒன்று செயல்படுகிறது. இதனால் மக்கள், குறிப்பாக பெண்கள் இயற்கை உபாதையை கழிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.நேற்று அப்பகுதிக்கு சென்ற பெண்களை, அவ்விடத்தில் மறைந்திருந்த வாலிபர் ஒருவர் நோட்டமிட்டுள்ளார். இதனையறிந்த அங்கிருந்தோர் சென்று, வாலிபரை பிடித்து பொதுமாத்து கொடுத்தனர். மக்களின் பிடியிலிருந்து அந்நபர் தப்பினார். இதனால் பெண்கள் பீதியடைந்துள்ளனர்.அவ்வார்டின் முன்னாள் கவுன்சிலர் மகாலிங்கம் கூறுகையில், ''இப்பகுதியில் வசிப்போருக்கு பொது கழிப்பிடம் கட்ட, மாநகராட்சியின் 46 சென்ட் இடம் ஓடைக்கு அருகேயுள்ளது. 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் எவ்வித பலனுமில்லை. பொது கழிப்பிடம் கட்டப்பட்டால், குற்றச் செயல்கள் நடப்பதை தவிர்க்கலாம். மக்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்," என்றார்.பெண்கள் இயற்கை உபாதையை கழிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று இயற்கை உபாதை கழிக்க சென்ற பெண்களை, அவ்விடத்தில் மறைந்திருந்த வாலிபர் ஒருவர் நோட்டமிட்டுள்ளார். இதனையறிந்த அங்கிருந்தோர் சென்று, வாலிபரை பிடித்து பொதுமாத்து கொடுத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE