புதுடில்லி நம் நாட்டில் ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுஉள்ளது.
இந்தியாவில் 1992ல் தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கை முதன் முறையாக வெளியிடப்பட்டது. அது முதல் மேற்கொள்ளப்பட்டு வந்த ஆய்வுகளில், பெண்களை விட ஆண்களே அதிக அளவில் இருந்தனர்.
கடந்த 2015 - 16ம் நிதியாண்டில் வெளியிடப்பட்ட தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கையில் 1,000 ஆண்களுக்கு, 991 பெண்கள் என பாலின விகிதாச்சாரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த நிதியாண்டிற்கான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், 1,000 ஆண்களுக்கு 1,020 பெண்கள் என்ற அளவில் விகிதாச்சரம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தேசிய குடும்ப சுகாதார ஆய்வறிக்கை நடைமுறை துவக்கப்பட்டது முதல் ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது இதுவே முதன் முறை.
கடந்த ஐந்து ஆண்டுகளில் குழந்தை பிறப்பு விகிதத்திலும் பெண்கள் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. 2015 - 16ம் ஆண்டில், 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 919 பெண் குழந்தைகள் என்ற விகிதாச்சாரத்தில் பாலின பிறப்பு இருந்தது.தற்போதைய அறிக்கையில், 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 929 பெண் குழந்தைகள் என்ற அளவிற்கு உயர்ந்துள்ளதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE