கோவை: ''சமூக வலைதளங்களில் கண்காணிப்பை பலப்படுத்துமாறு, அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது,'' என்று போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் தெரிவித்தார்.தமிழகத்தில் இணையதள பயன்பாடு அதிகம் இருக்கும் நகரங்களில் கோவையும் ஒன்று. இளம் வயதினர், முதியோர் என பல்வேறு வயதினரும், சமூக வலைதளங்களில் நேரம் செலவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி சமூக வலைதளங்களில் தெரிவிப்போரும் அதிகம். இவ்வாறு வெளியாகும் தகவல்களை சரியான முறையில் பகுத்தாய்ந்து, குறைபாடுகளுக்கு தீர்வு காண்பதற்கான திட்டங்களை, போலீசார் வகுத்து வருகின்றனர்.கோவையில் புதிதாக பொறுப்பேற்ற மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் இது பற்றி கூறியதாவது:சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல்கள், உடனுக்குடன் போலீஸ் அதிகாரிகள் கவனத்துக்கு வந்தால், பல பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது எளிதாகும். வரும் வாரங்களில் இணையத்தில் கோவை போலீசாரின் இருப்பும், கண்காணிப்பும் அதிகரிக்கும். இதன் மூலம் பொதுமக்கள் நலன், பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.போக்சோ சட்டம் குறித்து பள்ளி, கல்லுாரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியதாக, விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, பிரதீப் குமார் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE