தமிழ்நாடு

ரூ.3 கோடி மாநகராட்சி இடத்தை நகரமைப்பு பிரிவு அதிகாரிகள் ஆய்வு

Added : நவ 26, 2021
Share
Advertisement
கோவை: கோவை மாநகராட்சிக்கு சொந்தமான, 3 கோடி ரூபாய் மதிப்புள்ள பூங்கா இடத்தை ஆக்கிரமித்து, அருகாமையில் உள்ள லே-அவுட்டுக்கு, ரோடு போடுவதற்கான முயற்சி நடக்கிறது.கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம், 95வது வார்டில் அம்மன் நகர் உள்ளது. குறிச்சி புதுநகர் வளர்ச்சி குழுமத்தில் வரைபட அனுமதி பெறப்பட்டுள்ளது. மொத்தம், 2.77 ஏக்கர் பரப்பு கொண்டது; 31 மனைகளாக பிரித்து விற்கப்பட்டுள்ளன.இதில், 10



கோவை: கோவை மாநகராட்சிக்கு சொந்தமான, 3 கோடி ரூபாய் மதிப்புள்ள பூங்கா இடத்தை ஆக்கிரமித்து, அருகாமையில் உள்ள லே-அவுட்டுக்கு, ரோடு போடுவதற்கான முயற்சி நடக்கிறது.கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம், 95வது வார்டில் அம்மன் நகர் உள்ளது.
குறிச்சி புதுநகர் வளர்ச்சி குழுமத்தில் வரைபட அனுமதி பெறப்பட்டுள்ளது. மொத்தம், 2.77 ஏக்கர் பரப்பு கொண்டது; 31 மனைகளாக பிரித்து விற்கப்பட்டுள்ளன.இதில், 10 சதவீதமாக, 13 ஆயிரத்து, 136 சதுரடி (30 சென்ட்) பூங்காவுக்கும், 1,440 சதுரடி (3 சென்ட் ) கடைக்கும் ஒதுக்கப்பட உள்ளது. பூங்காவுக்கு ஒதுக்கிய இடம் குப்பை மற்றும் கழிவுகள் கொட்டப்பட்டு காலியாக கிடக்கிறது.
மாநகராட்சி சார்பில், 'போர்வெல்' போடப்பட்டு, அம்மன் நகர், கதிரவன் நகர், நாடார் காலனி உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது.பொது ஒதுக்கீட்டு இடத்தில், பூங்கா மற்றும் சமுதாய கூடம் ஏற்படுத்தித் தரக்கோரி, 2015ல் இருந்து அப்பகுதியில் வசிப்போர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் செவிசாய்க்காமல் இருக்கிறது. கம்பி வேலி அமைத்து, பூங்கா இடத்தை பாதுகாக்காமல் இருக்கிறது.இப்பகுதியை தொட்டவாறு, வெள்ளலுார் ராஜவாய்க்கால் செல்கிறது. அதனருகில் உள்ள லே-அவுட்டுக்கு, அணுகுசாலை ஏற்படுத்துவதற்காக, ராஜவாய்க்கால் குறுக்கே பாலம் கட்டியிருக்கின்றனர்.இப்போது, பூங்கா இடத்தை ஆக்கிரமித்து, ரோடு போடுவதற்கான முயற்சியில் இறங்கியிருக்கின்றனர். அதற்காக, பூங்கா இடத்தில் குவிந்திருந்த குப்பையை சமன் செய்திருக்கின்றனர்.பூங்கா இடத்தை இரு சைட்டுகள் போல் பிரித்துக் காண்பித்து, ராஜவாய்க்கால் குறுக்கே கட்டியுள்ள பாலத்துக்கு இணைப்பு ரோடு போல் ஏற்படுத்த ஆக்கிரமிப்பாளர்கள் முயற்சித்து வருகின்றனர்.இதற்கான வேலை ஆரம்பித்தபோது, அப்பகுதி மக்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்ததும், பணியை விட்டு விட்டுச் சென்றனர். மீண்டும் அதற்கான வேலையை துவக்குவதற்கான ஏற்பாடுகளை செய்ததால், மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.நகரமைப்பு அலுவலர் கருப்பாத்தாள், உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி ஆகியோர், அம்மன் நகருக்கு வந்து, பூங்கா இடத்தை பார்வையிட்டு, அப்பகுதியில் வசிப்போரிடம் விசாரித்துச் சென்றனர்.மாநகராட்சிக்கு சொந்தமான பூங்கா இடத்தின் மதிப்பு ரூ.3 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆய்வு செய்ததோடு நின்று விடாமல், சுற்றிலும் கம்பி வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும்; நிதி ஒதுக்கி, பூங்கா உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X