பொது செய்தி

தமிழ்நாடு

'காய்கறிகள் விலை உயர்ந்தாலும் லாபமில்லையே'

Added : நவ 26, 2021
Share
Advertisement
ராமநாதபுரம் : நாடு முழுக்க வளமோ, வறட்சியோ வாடுவது விவசாயிகள்தான். பயிர்களை சாகுபடி செய்ய, குடும்பத்துடன் போராடி விளைய வைத்தாலும் முழுபயனையும் அவர்கள் அனுபவிப்பதே இல்லை. காரணம், விளை பொருட்களை பாதுகாக்க வேண்டிய வசதிகள் இல்லாததே.உற்பத்திக்கு உதவும் எல்லா பொருளின் விலையும் மலையேறிவிட்டன. உற்பத்தி பொருளை உடனே விற்றாக வேண்டும். இதில் இடைத்தரகர்கள் பொருட்களை

ராமநாதபுரம் : நாடு முழுக்க வளமோ, வறட்சியோ வாடுவது விவசாயிகள்தான். பயிர்களை சாகுபடி செய்ய, குடும்பத்துடன் போராடி விளைய வைத்தாலும் முழுபயனையும் அவர்கள் அனுபவிப்பதே இல்லை. காரணம், விளை பொருட்களை பாதுகாக்க வேண்டிய வசதிகள் இல்லாததே.உற்பத்திக்கு உதவும் எல்லா பொருளின் விலையும் மலையேறிவிட்டன. உற்பத்தி பொருளை உடனே விற்றாக வேண்டும். இதில் இடைத்தரகர்கள் பொருட்களை கைமாற்றும்போது, பணத்தை விதைத்து பணத்தை விளைவித்துக் கொள்கின்றனர்.

இயற்கையும் அதிக வெயிலையோ, மழையையோ அளித்து விவசாயிகளை பாதிப்புக்கு ஆளாக்குகிறது. சமீபநாட்களாக நல்ல மழை உட்பட பல்வேறு காரணங்களால் காய்கறி விளைச்சல் பாதித்துள்ளது.இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் கூறியதாவது:


இடைத்தரகர்களால் பாதிப்பு


எஸ்.முத்துராஜ் விவசாயி, செவல்பட்டி, சாயல்குடி
தக்காளி விளையக்கூடிய பகுதிகளில் பெருவாரியாக மழையின் தாக்கத்தால், சேதத்தை விவசாயிகள் சந்திக்கின்றனர். தரைக்குடி, சேதுராஜபுரம், செவல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நாட்டுரக தக்காளிகளை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். அவற்றிற்கான உற்பத்தியை பெருக்கினாலும்,விலை குறைவாகவே உள்ளது. சமீபத்தில் பெய்த மழையை நம்பி தக்காளி செடிகளை நடவு செய்துள்ளோம்.

பொதுவாக பெங்களூர் ரக தக்காளியே மார்க்கெட், கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. மழைகாலங்களில் தக்காளியை காப்பாற்றுவது சவாலான விஷயம். கஷ்டப்பட்டு உழைத்து தக்காளியை சாகுபடி செய்தால்,இடைத்தரகர்கள் குறைந்த விலைக்கு பெற்று,கொள்ளை லாபம் அடைகின்றனர். அரசு இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக விவசாயிகளுக்கு கட்டுப்பாடியாகும் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


குறைந்த விலைக்கு தான்வாங்குகின்றனர்


ஆதியூர் தம்பிராஜ் விவசாயி, திருவாடானை
திருவாடானை பகுதியில் நெல் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. இருந்தபோதும் நெல் அறுவடைக்கு பின்பு சில விவசாயிகள் மட்டும் கத்தரிக்காய், தக்காளி, வெண்டை போன்றவைகளை ஊடுபயிராக பயிரிடுவோம். தக்காளி விலை உயர்ந்தாலும் வியாபாரிகள் எங்களிடம் குறைந்த விலைக்கு தான் வாங்குகிறார்கள். இதனால் விவசாய செலவை கணக்கிட்டு பார்க்கும் போது போதிய லாபம் இல்லை. வேறு வழியில்லாமல் வியாபாரிகளிடம் விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது என்றார்.


விவசாயிகளுக்கு பலனில்லை


வே.ராமர், விவசாயி, கமுதி
இதுவரை இல்லாத அளவிற்கு தக்காளி விலை அதிகரித்துள்ளது.தக்காளி விவசாயத்தில் கூடுதலான விலை கிடைத்தும் விவசாயிகளுக்கு பயனில்லை.தக்காளி விளைச்சல் தொடர்மழையால் பாதிப்பு ஏற்பட்டு செடியில் வீணாகி வருகிறது. இதனால் போதுமான விளைச்சல் இருந்தும் பயனில்லை. மழைதொடர்ந்து பெய்து வருவதால் தக்காளி விலை குறைவதற்கு ஒரு மாதத்திற்கு மேல் ஆகும். எனவே தக்காளி விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு செடியில் தக்காளி வீணாகமல் தடுக்க தோட்டக்கலை அதிகாரிகள் அறிவுரைகள் வழங்க வேண்டும்,என்றார்.


மகசூல் பாதிப்பு


துரை.தவமணி, விவசாயி பெருமாள்மடை, ஆர்.எஸ்.மங்கலம்
தக்காளி, கத்தரிக்காய், வெண்டைக்காய், முருங்கைக்காய் உள்ளிட்டவைகளின் காய்கறி விலை உயர்ந்துள்ளது. தற்போது பெய்த தொடர் மழையின் காரணமாக காய்கறி செடிகள் பாதிப்படைந்ததால், காய்கறி மகசூல் பாதிப்படைந்துள்ளது. இதனால் நிலவும் தட்டுப்பாடு காரணமாக தக்காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது. ஆனால் தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் சாகுபடி செய்யும், விவசாயிகளுக்கு அந்த விலை உயர்வு கிடைக்கவில்லை. தற்போது ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை பயன்படுத்தி, இடைத்தரகர்கள் தான் கொள்ளை லாபம் சம்பாதிக்கின்றனர், அரசே கொள்முதல் செய்து விவசாயிகள் பலனடைய செய்ய வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X