அரசியல் செய்தி

தமிழ்நாடு

கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட இன்று அ.தி.மு.க., விருப்ப மனு

Added : நவ 26, 2021
Share
Advertisement
கோவை: கோவை மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட, கட்சியினரிடம் விருப்ப மனு பெறும் நிகழ்ச்சியை, அ.தி.மு.க., இன்று (26ம் தேதி) துவக்குகிறது; வரும், 28ம் தேதி மாலை, 5:00 மணி வரை வழங்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. டிச., 9ல் வார்டு வாரியான வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என, மாநில தேர்தல் ஆணையம்

கோவை: கோவை மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட, கட்சியினரிடம் விருப்ப மனு பெறும் நிகழ்ச்சியை, அ.தி.மு.க., இன்று (26ம் தேதி) துவக்குகிறது; வரும், 28ம் தேதி மாலை, 5:00 மணி வரை வழங்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. டிச., 9ல் வார்டு வாரியான வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என, மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதைத்தொடர்ந்து, தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்பதால், அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராக ஆரம்பித்து விட்டன.கோவை மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விரும்பும் அ.தி.மு.க.,வினருக்கு, இன்று முதல் 28ம் தேதி மாலை, 5:00 மணி வரை, மாவட்ட தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில், விருப்ப மனு வழங்கப்பட உள்ளது.மனுவை பூர்த்தி செய்து, ரூ.5,000 கட்டணம் செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே விருப்ப மனு செலுத்தியவர்கள், பணம் செலுத்தியதற்கான ரசீதை காட்டி, விருப்ப மனுக்களை பெற்று, பூர்த்தி செய்து கொடுக்கலாம் என, மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுனன் தெரிவித்துள்ளார்.இந்நிகழ்வை, முன்னாள் அமைச்சர் வேலுமணி, மாவட்ட செயலாளர்கள் அம்மன் அர்ச்சுனன், அருண்குமார் ஆகியோர் இன்று காலை, 9:00 மணிக்கு துவக்கி வைக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X