பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பணை இல்லாமல் வீணாகும் தண்ணீர்

Added : நவ 26, 2021
Share
Advertisement
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே தடுப்பணை இல்லாததால் கண்மாய்க்கு செல்லாமல் தண்ணீர் வீணாகி வருகிறது.இவ்வொன்றியத்தில் எருமைபட்டி அருகே உள்ள பிராமணம் கால்வாய் வழியாக மணிமுத்தாறு தண்ணீர் பல்வேறு ஊர்களுக்கு செல்கிறது. ஆனால் எஸ்.மாம்பட்டி ஊராட்சியில் புதுக்குடி கண்மாய், இடையன் கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும் போது முறையான தடுப்பணை, மதகுகள் இல்லாததால் கண்மாய்க்குள்

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே தடுப்பணை இல்லாததால் கண்மாய்க்கு செல்லாமல் தண்ணீர் வீணாகி வருகிறது.

இவ்வொன்றியத்தில் எருமைபட்டி அருகே உள்ள பிராமணம் கால்வாய் வழியாக மணிமுத்தாறு தண்ணீர் பல்வேறு ஊர்களுக்கு செல்கிறது. ஆனால் எஸ்.மாம்பட்டி ஊராட்சியில் புதுக்குடி கண்மாய், இடையன் கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லும் போது முறையான தடுப்பணை, மதகுகள் இல்லாததால் கண்மாய்க்குள் சென்ற தண்ணீர் மீண்டும் வெளியேறி விடுகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே இக்கண்மாய்களுக்கு பிராமண கால்வாய் அணைக்கட்டில் இருந்து வரும் தண்ணீரை பயன்படுத்த வசதியாக தடுப்பணை அமைத்துத் தர அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

எம்.எஸ். உலகநாதன், ஒப்பிலான்பட்டி: சுமார் 100 ஏக்கர் பரப்புள்ள இக்கண்மாய்களை நம்பி 150க்கும் மேற்பட்ட ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளன. கால்வாயில் தண்ணீர் வரும்போது கண்மாய்க்குள் சென்றுவிட்டு தண்ணீர் தேங்காமல் வெளியேறிவிடுகிறது. இந்த இரு கண்மாய்களுக்கும் உடனடியாக தடுப்பணை கட்டி கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X