பஞ்சாப்பில் வெடிகுண்டுத் தாக்குதலில் ஈடுபட இருந்த காலிஸ்தான் பயங்கரவாதிக்கு பாக்., ஆதரவு

Updated : நவ 26, 2021 | Added : நவ 26, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
சுரே: பஞ்சாப்பில் வெடிகுண்டுத் தாக்குதலில் ஈடுபட இருந்த கனடாவைச் சேர்ந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங்குக்கு பாக்., ஆதரவளித்ததை அடுத்து என்ஐஏ தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகரைச் சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜார் என்கிற நபர்மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. பாகிஸ்தானின் உதவியுடன் இந்தியாவில்

சுரே: பஞ்சாப்பில் வெடிகுண்டுத் தாக்குதலில் ஈடுபட இருந்த கனடாவைச் சேர்ந்த காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங்குக்கு பாக்., ஆதரவளித்ததை அடுத்து என்ஐஏ தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.latest tamil newsபஞ்சாப் மாநிலம் ஜலந்தர் நகரைச் சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜார் என்கிற நபர்மீது தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. பாகிஸ்தானின் உதவியுடன் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்த இவன் திட்டமிட்டுள்ளான்.
சமீப காலமாக இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்த வண்ணம் உள்ளன. காஷ்மீரில் முன்னதாக இரு பயங்கரவாதிகள் ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்நிலையில் டில்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் உதவியுடன் கனடா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகளில் ஸ்லீப்பர் செல்கள் இயங்கி வருவதாகத் தகவல் வெளியானது.


latest tamil newsபல ஆண்டு காலமாக திட்டமிடப்பட்ட இந்த தாக்குதலை தடுக்க என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனை அடுத்து பாகிஸ்தான் ஆயுத சப்ளை மற்றும் ஆதரவுடன் ஜலந்தர் நகரைச் சேர்ந்த ஹர்தீப் சிங் இந்தியாவின் முக்கிய நகரங்களில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாக தெரியவந்தது. என்ஐஏ அதிகாரிகள் ஹர்தீப் சிங்மீது டில்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர, ஹர்தீப்மீது சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டம் பதியப்பட்டது.
கனடாவின் சுரே மாகாணத்தில் வசித்துவரும் ஹர்தீப், பல ஆண்டு காலமாக பாகிஸ்தானின் உதவியுடன் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டான். பஞ்சாப் மாநிலத்தில் தொடர் வெடிகுண்டுத் தாக்குதல் நடத்த கனடாவில் இருந்தபடியே இந்தியாவிலுள்ள பயங்கரவாதிகளுக்கு பல்வேறு பணப்பரிமாற்ற முறைகள் மற்றும் ஹவாலா பிரிவுகள் மூலமாக பணம் அனுப்பியுள்ளான். சீக்கிய பயங்கரவாத அமைப்பான காலிஸ்தானின் 'சீக் ஃபார் ஜஸ்டிஸ்' அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளான்.
மத்திய இந்திய அரசை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான பதிவுகள் மற்றும் வீடியோக்களை ஹர்தீப் பதிவேற்றினான். தற்போது என்ஐஏ அதிகாரிகளால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஹர்தீப் இடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PUSHYA PUTHTHIRN - chennai,இந்தியா
26-நவ-202116:29:29 IST Report Abuse
PUSHYA  PUTHTHIRN இப்போதுபுரிகிறதா விவசாய சட்ட மசோதா ஏன் திரும்பப் பெறப் பட்டது என்று? முன்னாள் முதல்வர் அமரீந்தர் அமீத் ஷாவுடன் ஆன சந்திப்பில் பாக்கிலிருந்து ஆயுதங்களும் போதை பொருள்களும் கணக்கு வழக்கில்லாமல் கடத்தப் பட்டுக் கொண்டிருப்பதை சொல்லாமல் இருந்திருப்பாரா? போராட்ட முன் களத்தை சாதகமாக்கிக் கொண்டு தலை நகர் உட்பட நாடு முழுதும் நாச வேலை நடத்துவதற்காக பசுத்தோல் போர்த்திய ஆத்மிகளின் பேராதரவோடு ஆயுதங்களையும் வெடி ப்பொருட்களையும் ஸ்டாக் செய்யப் போகும் தருணத்தில் தான் இந்த பயங்கரவாதி கைது செய்யப் பட்டுள்ளான்//////உள்துறை அமைச்சரும் பிரதமரும் தங்கள் பொறுப்பறிந்து செய்துள்ளனர்/////போராட்டம் தொடங்கப் பட்டதும், அது நீட்டிக்கப் அட்டதும் சீன பாக். , கனடா, லண்டன் இவற்றிலிருந்து வந்திருங்கும் பொருளுதவியும் பசுத்தோல் ஆத்மிகளும் தான் காரணம்,,,,,உண்மை விவசாயிகளே அல்ல என்பது உலகறிந்த விஷயம் /////சொல்லப் போனால் """""விவசாய"""" போராட்டம் என்பதே காலிஸ்தானிகள் இந்திராவுக்கு வகுத்த அதே திட்டம் போன்றது தான்///// சுதாரித்தார் பிரதமர்////////தகவலிருந்தாலும் ,,போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் நாசக் காரர்கள் மேல் கை வைத்தால் என்ன நடந்திருக்கும் என்பதை யோசித்த பிறகு தான் அதற்கான முகாந்திரத்தை அரசு நீக்க முற்பட்டுள்ளது////ரத்தக் களரி சமயோசிதமாக முறியடிக்கப் பட்டுள்ளது//////பயங்கரவாதி ஹர்தீப்பிடம் இருந்து பெறப்படும் தகவல்கள் நிச்சயம் பாக் ( அதாங்க, கிங் பின் தயவில் அன்று தங்கள் பொருளாதாரத்தை கிடு கிடு வென்று உயர்த்திய ""நல்ல"" நாடு),மற்றும் சீனா இவற்றை நோக்கி ஏன் பசுத்தோல் புன்னகை கட்சிக்கார ஆத்மிகள் பக்கம் கூட நிச்சயம் திரும்பும் என எதிர்பார்க்கலாம். .
Rate this:
Cancel
raja - Cotonou,பெனின்
26-நவ-202112:53:39 IST Report Abuse
raja நமது இந்திய ராணுவத்தில் 75 சதம் சிங் குகள் தான் பணிபுரிகிறார்கள் அவர்களின் தேசபக்தி வீரம் இப்பொழுது கேள்விக்குறி...ஒருமுறை நான் SSC செலெக்ஷனுக்காக மும்பை சென்ற பொது என்னுடன் வந்த அனைத்து சிங்குகளும் தேர்வு செய்தார்கள்..அவர்களிடம் உடல் உறுதி, வீரம் மற்றும் தேசபக்தி மூன்றும் இருக்கும் என்று காரணம் வேறு கூறினார்கள்...இனி அவர்களை சந்தேக கண்ணோட்டத்துடன்தான் பார்க்கும் இந்த சமூகம்...
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
26-நவ-202112:41:12 IST Report Abuse
jayvee காலிஸ்தானிகள் அதிகளவில் உபயகிக்கும் LINKEDIN தளத்தை NIA கவனிக்கவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X