சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துாத்துக்குடி விமானம் திருச்சியில் தரையிறக்கம்

Added : நவ 26, 2021
Share
Advertisement
சென்னை:சென்னையில் இருந்து துாத்துக்குடிக்கு, 35 பயணி யருடன் சென்ற 'இண்டிகோ' விமானம் மோசமான வானிலை காரணமாக, திருச்சிக்கு திருப்பிவிடப்பட்டது.சென்னையில் இருந்து நேற்று பகல் 1:55 மணிக்கு, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணியர் விமானம், துாத்துக்குடி புறப்பட்டு சென்றது. அதில், தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு உட்பட 35 பயணியர் பயணித்தனர்.விமானம் துாத்துக்குடியை நெருங்கிய போது, அங்கு

சென்னை:சென்னையில் இருந்து துாத்துக்குடிக்கு, 35 பயணி யருடன் சென்ற 'இண்டிகோ' விமானம் மோசமான வானிலை காரணமாக, திருச்சிக்கு திருப்பிவிடப்பட்டது.

சென்னையில் இருந்து நேற்று பகல் 1:55 மணிக்கு, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணியர் விமானம், துாத்துக்குடி புறப்பட்டு சென்றது. அதில், தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு உட்பட 35 பயணியர் பயணித்தனர்.விமானம் துாத்துக்குடியை நெருங்கிய போது, அங்கு பலத்த காற்று, இடியுடன் கூடிய மழை பெய்து, மோசமான வானிலை நிலவியது.
இதனால், துாத்துக்குடியில் விமானம் தரையிறங்க முடியாமல், சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டது.சென்னைக்கு திரும்பிய விமானம், திடீரென திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது. துாத்துக்குடியில் வானிலை சீரடைந்த பின், மீண்டும் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X