தமிழ்நாடு

பாலியல் புகார் வந்தால் என்ன செய்யணும்? ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு

Added : நவ 26, 2021
Share
Advertisement
கோவை: பாலியல் புகார்கள் பதிவாகும் போது, பள்ளிகள் சார்பில், பின்பற்ற வேண்டிய நடைமுறை குறித்து, ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.கோவை, கரூர் மாவட்டங்களில், தனியார் பள்ளி மாணவியர், பாலியல் தொந்தரவால், அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறும் போது,



கோவை: பாலியல் புகார்கள் பதிவாகும் போது, பள்ளிகள் சார்பில், பின்பற்ற வேண்டிய நடைமுறை குறித்து, ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.கோவை, கரூர் மாவட்டங்களில், தனியார் பள்ளி மாணவியர், பாலியல் தொந்தரவால், அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம், பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறும் போது, பள்ளி நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமென, போதிய விழிப்புணர்வு இல்லாதது தெரியவந்துள்ளது.குறிப்பாக, ஆசிரியர்களே உளவியல் கவுன்சிலிங் அளிப்பதால், பாதிக்கப்பட்ட மாணவர்களின் மனநிலையில் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை. உரிய துறை சார்ந்த அதிகாரிகள் கவுன்சிலிங் அளிப்பதே, தற்கொலை எண்ணங்களில் இருந்து விடுவிக்கும்.இதுபோன்ற புகார்களை மறைக்க, பள்ளி நிர்வாகம் முயற்சி எடுப்பதாலும், விபரீதம் அதிகரிக்கும். இதுகுறித்து, அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென, முதன்மை கல்வி அலுவலர்களுக்கான கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.முதன்மை கல்வி அலுவலர் கீதாவிடம் கேட்டபோது, ''கலெக்டர் தலைமையில், இதுசார்ந்த ஆலோசனை கூட்டம், நாளை (இன்று) நடக்கிறது. விரைவில், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், சைல்டு லைன் ஆகிய துறைகளுடன் இணைந்து, ஆசிரியர்களுக்கு கூட்டம் நடத்தி, பாலியல் புகார்களின் போது, பின்பற்ற வேண்டிய நடைமுறை குறித்து விளக்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X