சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள் 

Added : நவ 26, 2021
Share
Advertisement
டூவீலர் பணம் ரூ.1.76 லட்சம் மோசடி;உரிமையாளர் மீது வழக்குசாக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலை சேர்ந்தவர் ராஜசேகர் 23. இவரது தேவைக்காக காரைக்குடி அருகே அரியக்குடி அலெக்ஸ் ராஜ் 35, என்பவர் புதுவயலில் நடத்தி வரும் டூ வீலர் ேஷாரூமில் டூவீலர் வாங்க முடிவு செய்தார். கடந்த ஜன.,11 ம் தேதி டூவீலருக்காக ரூ.1.76 லட்சம் செலுத்தினார். ஆனால் ேஷாரூம் உரிமையாளர் வண்டியையும்,

டூவீலர் பணம் ரூ.1.76 லட்சம் மோசடி;உரிமையாளர் மீது வழக்கு

சாக்கோட்டை: விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலை சேர்ந்தவர் ராஜசேகர் 23. இவரது தேவைக்காக காரைக்குடி அருகே அரியக்குடி அலெக்ஸ் ராஜ் 35, என்பவர் புதுவயலில் நடத்தி வரும் டூ வீலர் ேஷாரூமில் டூவீலர் வாங்க முடிவு செய்தார். கடந்த ஜன.,11 ம் தேதி டூவீலருக்காக ரூ.1.76 லட்சம் செலுத்தினார். ஆனால் ேஷாரூம் உரிமையாளர் வண்டியையும், பணத்தையும் தராமல் மோசடி செய்துள்ளார். பணத்தைகேட்ட ராஜசேகரையும் மிரட்டி தாக்கியுள்ளார். சாக்கோட்டை இன்ஸ்பெக்டர் அல்லிராணி விசாரிக்கிறார்.

வாலிபர் துாக்கிட்டு தற்கொலை

சாலைக்கிராமம்: சூராணத்தை ஜான்கென்னடி மகன் விக்கி 18. இவர் தொடர்ந்து வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். தாய் ராஜாத்தி கண்டித்துள்ளார். மனமுடைந்த வாலிபர் நவ.,24 அன்று மதியம் 2:30 மணிக்கு வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். இன்ஸ்பெக்டர் அழகர் விசாரிக்கிறார்.

பஸ் மோதி போலீஸ்காரர் பலி

இளையான்குடி: இளமனுார் சித்திரவேலு மகன் சுரேஷ் 30. இவர் சாலைக்கிராமம் ஸ்டேஷனில் போலீஸ்காரராக உள்ளார். நேற்று டூவீலரில் இளையான்குடிக்கு திரும்பியுள்ளார். நேற்று மாலை 4:00 மணிக்கு திருவேங்கடம் அருகே வந்தபோது பரமக்குடியில் இருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு பஸ், போலீஸ்காரர் டூவீலரில் மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் சம்பவ இடத்திலேயே போலீஸ்காரர் பலியானார். இளையான்குடி இன்ஸ்பெக்டர் அழகர் விசாரிக்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X