செய்தி செய்தி

தமிழ்நாடு

157 பறிமுதல் வாகனம் டிசம்பர் 8ம் தேதி ஏலம்

Added : நவ 26, 2021
Share
Advertisement
கோவை: கோவை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 133 டூவீலர்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள் உட்பட, 157 வாகனங்கள் ஏலம் விடப்படவுள்ளன.டிச., 8ம் தேதி காலை 10:00 மணிக்கு கோவை, அவிநாசி ரோடு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து நடக்கும் ஏலத்தில், 133 டூவீலர்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள், 17 நான்கு சக்கர வாகனங்கள், 5 ஆறு சக்கர வாகனங்கள் என, 157 வாகனங்கள் இடம்

கோவை: கோவை மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 133 டூவீலர்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள் உட்பட, 157 வாகனங்கள் ஏலம் விடப்படவுள்ளன.டிச., 8ம் தேதி காலை 10:00 மணிக்கு கோவை, அவிநாசி ரோடு மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து நடக்கும் ஏலத்தில், 133 டூவீலர்கள், 2 மூன்று சக்கர வாகனங்கள், 17 நான்கு சக்கர வாகனங்கள், 5 ஆறு சக்கர வாகனங்கள் என, 157 வாகனங்கள் இடம் பெறும்.இவ்வாகனங்கள் பொள்ளாச்சி, வெங்கடேசா காலனியில் உள்ள மதுவிலக்கு அமல்பிரிவு அலுவலகம், கோவில்பாளையத்தில் உள்ள மதுவிலக்கு அமல்பிரிவு அலுவலகம், சூலுார், மதுக்கரை, க.க.சாவடி, மேட்டுப்பாளையம், செட்டிபாளையம், தொண்டாமுத்துார், நெகமம், வால்பாறை பகுதிகளில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.ஏலம் எடுக்க விரும்புவோர், டிச., 7ம் தேதி மாலை 5:00 மணிக்குள் அந்தந்த மதுவிலக்கு அமல்பிரிவு மற்றும் போலீஸ் ஸ்டேஷன்களில் பார்வையிடலாம். ஏலத்தில் எடுக்கும் வாகனங்களுக்கு ஜி.எஸ்.டி., உண்டு.இத்தகவலை, மாவட்ட போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X