பொது செய்தி

தமிழ்நாடு

கால்நடைகளுக்கு நோய் அறிகுறி தென்பட்டால் மருத்துவ முகாம்

Added : நவ 26, 2021
Share
Advertisement
சென்னை:கால்நடைகளுக்கு நோய் தொற்று அறிகுறி தென்பட்டால், உரிய சிகிச்சை மேற்கொள்ளவும், கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தவும், அனைத்து கால்நடை நிலையங்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.முன்னெச்சரிக்கை இது தொடர்பாக, கால்நடை பராமரிப்பு துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த ஆண்டு முதல் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், கோமாரி நோய் தடுப்பூசி

சென்னை:கால்நடைகளுக்கு நோய் தொற்று அறிகுறி தென்பட்டால், உரிய சிகிச்சை மேற்கொள்ளவும், கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தவும், அனைத்து கால்நடை நிலையங்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.


முன்னெச்சரிக்கை


இது தொடர்பாக, கால்நடை பராமரிப்பு துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த ஆண்டு முதல் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், கோமாரி நோய் தடுப்பூசி மருந்துகள், மத்திய அரசால் 100 சதவீதம் மானியத்தில், தமிழகத்திற்கு வழங்கப்படுகின்றன.
முதல் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணி, 2020 செப்டம்பரில் முடிவடைந்தது. மொத்தம் 87.03 லட்சம் மாட்டினங்கள் பயனடைந்தன. இந்த ஆண்டு, இரண்டாம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணிக்கு, 90 லட்சம் தடுப்பூசி அலகுகள், மத்திய அரசிடம் கேட்கப்பட்டன.
மத்திய அரசு மருந்து வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.கால்நடை மருத்துவ நிலையங்களில், கையிருப்பு இருந்த கோமாரி நோய் தடுப்பூசி மருந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கேரளா, கர்நாடக மாநில எல்லையோர மாவட்டங்களில் உள்ள எல்லையோர கிராமங்களில், செப்டம்பர் வரை 2.69 லட்சம் தடுப்பூசி போடப்பட்டது.
கோமாரி நோய் தடுப்பூசிநீலகிரி, கன்னியாகுமரி மாவட்டங்களில், 100 சதவீதம் தடுப்பூசி பணி நிறைவடைந்துள்ளது. தற்போது 28.85 லட்சம் கோமாரி நோய் தடுப்பூசி, மத்திய அரசிடம் பெறப்பட்டு, ஈரோடு, தஞ்சாவூர், சேலம், திருப்பூர், கோவை, திருவண்ணாமலை, தர்மபுரி, மதுரை, தேனி, திருவாரூர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள கால்நடைகளுக்கு போடப்படுகின்றன.
நேற்றுமுன்தினம் வரை, 21.05 லட்சம் மாடுகளுக்கு, கோமாரி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மத்திய அரசிடம், தற்போது 61.15 லட்சம் கோமாரி நோய் தடுப்பூசி கேட்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கு நோய் தொற்று அறிகுறி தென்பட்டால், உரிய சிகிச்சை அளிக்கவும், கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தவும், அனைத்து கால்நடை நிலையங்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுஉள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X