செய்தி செய்தி

தமிழ்நாடு

மக்காச்சோள பயிர் காப்பீடுக்கு வரும் 30ம் தேதி கடைசி நாள் 

Added : நவ 26, 2021
Share
Advertisement
கோவை; ராபி பருவ மக்காச் சோள பயிர் காப்பீடு செய்ய வரும், 30ம் தேதி கடைசி நாள் என்பதால், விவசாயிகள் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பருவத்திலும், வட்டாரத்துக்கு ஏற்ப பயிர்கள் அறிவிக்கப்பட்டு, காப்பீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.அதன்படி, ராபி பருவத்தில் கோவை மாவட்டத்தில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள சோளம்,

கோவை; ராபி பருவ மக்காச் சோள பயிர் காப்பீடு செய்ய வரும், 30ம் தேதி கடைசி நாள் என்பதால், விவசாயிகள் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பருவத்திலும், வட்டாரத்துக்கு ஏற்ப பயிர்கள் அறிவிக்கப்பட்டு, காப்பீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.அதன்படி, ராபி பருவத்தில் கோவை மாவட்டத்தில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள சோளம், மக்காச்சோளம், கொண்டைக்கடலை, நிலக்கடலை, கரும்பு ஆகிய பயிர்களுக்கு, பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தப்பட்டனர்.சோளம், ரூ.142, மக்காச்சோளம், ரூ.450, கொண்டைக்கடலை, ரூ.256, நிலக்கடலை, ரூ.448, கரும்பு, ரூ.2,785 என, காப்பீடு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.விவசாயிகள், சிட்டா, அடங்கல், ஆதார் நகல், வங்கி பாஸ்புக், போட்டோ உள்ளிட்டவற்றுடன் பொது இ-சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் அல்லது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில், பிரீமியத் தொகையை செலுத்தலாம்.மக்காச்சோளம், கொண்டைக்கடலைக்கு வரும் 30ம் தேதி, நிலக்கடலை, சோளத்துக்கு, டிச., 15, கரும்புக்கு, 2022, ஆக., 31ம் தேதிக்குள் பிரீமியம் செலுத்த வேண்டுமென, மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சித்ராதேவி அறிவுறுத்தியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X