துளிகள் செய்தி

தமிழ்நாடு

தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் மினி கிளினிக்குகள் காலி

Added : நவ 26, 2021
Share
Advertisement
தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் இருந்த, 12 மினி கிளினிக்குகளும், கட்டடங்களில் இருந்து காலி செய்யப்பட்டு வருகின்றன.தமிழகத்தில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது, தமிழகம் முழுவதும், 2,000 அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டது. கோவையில், 70 மினி கிளினிக்குகளும் திறக்கப்பட்டன.அதில், தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், வேடபட்டி, வடவள்ளி, போளுவாம்பட்டி, பேரூர் செட்டிபாளையம்,

தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் இருந்த, 12 மினி கிளினிக்குகளும், கட்டடங்களில் இருந்து காலி செய்யப்பட்டு வருகின்றன.தமிழகத்தில், கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது, தமிழகம் முழுவதும், 2,000 அம்மா மினி கிளினிக் திறக்கப்பட்டது. கோவையில், 70 மினி கிளினிக்குகளும் திறக்கப்பட்டன.அதில், தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், வேடபட்டி, வடவள்ளி, போளுவாம்பட்டி, பேரூர் செட்டிபாளையம், புள்ளாகவுண்டன்புதூர் உள்ளிட்ட, 12 இடங்களில், அம்மா மினி கிளினிக் துவங்கப்பட்டது.இதற்காக, தொண்டாமுத்தூர் வட்டாரத்திற்கு, ஒப்பந்த அடிப்படையில், 12 டாக்டர்களும், 2 செவிலியர், 2 உதவியாளர்களும் நியமிக்கப்பட்டனர். இதில், 1 டாக்டர் பணியிடம் மாறி சென்றதால், 11 டாக்டர்கள் மட்டும் பணிபுரிந்தனர்.இங்கு தினமும், காலை, மாலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், மினி கிளினிக் மூடப்பட்டது. தற்போது, மினி கிளினிக் செயல்பட்டு வந்த கட்டடங்கள் காலி செய்யப்பட்டு, அந்தந்த துறைகளிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், 12 இடங்களில் அம்மா மினி கிளினிக் செயல்பட்டு வந்தது. 11 டாக்டர்கள் பணியாற்றி வந்தனர். ஒவ்வொரு மினி கிளினிக்கிலும், நாள்தோறும் 30 முதல் 50 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.9 மாதங்களுக்கு முன், இந்த 11 டாக்டர்களும், கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால், மினி கிளினிக் செயல்படவில்லை.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், மினி கிளினிக் செயல்பட்டுவந்த கட்டடங்களை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.இதனையடுத்து, மினி கிளினிக்கில் இருந்த மருந்து மற்றும் பொருட்கள், அருகில் உள்ள துணை சுகாதார நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன' என்றார்.இங்கு தினமும், காலை, மாலையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், மினி கிளினிக் மூடப்பட்டது. தற்போது, மினி கிளினிக் செயல்பட்டு வந்த கட்டடங்கள் காலி செய்யப்பட்டு, அந்தந்த துறைகளிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X