பாரதியார் பல்கலை தொலைதுார கல்வி மாணவர் சேர்க்கையில் 50 சதவீதம் சரிவு

Added : நவ 26, 2021
Share
Advertisement
கோவை: பல்கலை மானியக்குழுவின் (யு.ஜி.சி.,) விதிமுறைப்படி, எல்லைக்கு அப்பாற்பட்ட கல்வி மையங்களை மூடியதால், பாரதியார் பல்கலை தொலை துாரக் கல்வியில், 50 சதவீதம் அளவுக்கு மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.பாரதியார் பல்கலையின் கட்டுப்பாட்டில், தொலை துார கல்வி செயல்பட்டு வருகிறது. பல மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு தேவையான அனைத்து

கோவை: பல்கலை மானியக்குழுவின் (யு.ஜி.சி.,) விதிமுறைப்படி, எல்லைக்கு அப்பாற்பட்ட கல்வி மையங்களை மூடியதால், பாரதியார் பல்கலை தொலை துாரக் கல்வியில், 50 சதவீதம் அளவுக்கு மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது.பாரதியார் பல்கலையின் கட்டுப்பாட்டில், தொலை துார கல்வி செயல்பட்டு வருகிறது. பல மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். இவர்களுக்கு தேவையான அனைத்து பாடத்திட்டங்களும், தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.பல்கலையின் தொலை துார கல்வி மையங்கள், 2015ம் ஆண்டுக்கு முன் நாடு முழுவதும் செயல்பட்டு வந்தன. இந்நிலையில், 2015ம் ஆண்டு யு.ஜி.சி., பல்கலைகள் தங்களது தொலை துார கல்வி மையங்களை, பல்கலை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டுமே நடத்த வேண்டும் என, உத்தரவிட்டது.ஏற்கனவே செயல்பட்டு வரும், கல்வி மையங்களை மூடவும் அறிவுறுத்தியது. இதையடுத்து பல்வேறு பல்கலைகளும், தங்களது கல்வி நிறுவனங்களை படிப்படியாக குறைத்தன.பாரதியார் பல்கலையும் தனது கல்வி மையங்களை, தமிழகத்துக்குள் மட்டும் நடத்த துவங்கியது. இதன் காரணமாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் தொலை துார கல்வி மையங்கள் மூலம் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை, 50 சதவீதம் வரை குறைந்துள்ளது. பல்கலைக்கான வருவாயும் கணிசமான அளவு குறைந்துள்ளது.பாரதியார் பல்கலை தொலை துார கல்வி மைய இயக்குனர் தாமஸ் கூறுகையில், ''யு.ஜி.சி., யின் உத்தரவால், பிற மாநில மாணவர் சேர்க்கை சரிந்துள்ளது. பல்கலைகள் தங்கள் வரம்புக்குட்பட்ட பகுதிகளுக்குள், கல்வி மையங்களை நடத்த உத்தரவிட்டதால், பிற பல்கலைகளுடன் போட்டியிட முடியவில்லை.இதன் மூலம் மாணவர் சேர்க்கை, 50 சதவீதம் குறைந்து விட்டது. ஆனால், கொரோனாவுக்குப் பின் குடும்பத்தின் பொருளாதார சூழல் காரணமாக, அனைவரும் பணிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், தொலைதுார கல்வியில் மாணவர்கள் சேர்ந்து படிக்க விரும்புகின்றனர். இதன் மூலம் மாணவர் சேர்க்கை சற்று அதிகரித்துள்ளது,'' என்றார்.கொரோனாவுக்குப் பின் குடும்பத்தின் பொருளாதார சூழல் காரணமாக, அனைவரும் பணிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், தொலைதுார கல்வியில் மாணவர்கள் சேர்ந்து படிக்க விரும்புகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X