தக்காளி வாங்க உழவர் சந்தையை பயன்படுத்திக்கொள்ளுங்கள்: பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்| Dinamalar

செய்தி செய்தி

தமிழ்நாடு

தக்காளி வாங்க உழவர் சந்தையை பயன்படுத்திக்கொள்ளுங்கள்: பொதுமக்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தல்

Added : நவ 26, 2021
Share
கோவை; உழவர் சந்தைகளில் மொத்த தக்காளி வரத்து அதிகரித்து, விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதால் உழவர் சந்தையை விவசாயிகள், நுகர்வோர் பயன்படுத்திக்கொள்ள, கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.கோவை கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கை:கோவையில் தற்போது தக்காளி விலை சரிந்து கிலோ 75-80 ரூபாய் என்று, உழவர் சந்தையில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் இருந்தும் தக்காளி மொத்த



கோவை; உழவர் சந்தைகளில் மொத்த தக்காளி வரத்து அதிகரித்து, விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதால் உழவர் சந்தையை விவசாயிகள், நுகர்வோர் பயன்படுத்திக்கொள்ள, கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார்.கோவை கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கை:கோவையில் தற்போது தக்காளி விலை சரிந்து கிலோ 75-80 ரூபாய் என்று, உழவர் சந்தையில் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற மாநிலங்களில் இருந்தும் தக்காளி மொத்த வரத்து அதிகரித்துள்ளது. உழவர் சந்தையில் நுகர்வோருக்கு, 2 கிலோ தக்காளி என்ற முறையில் வழங்கவும், சுப நிகழ்ச்சிகளுக்கு நிர்வாக அலுவலரிடம் அழைப்பிதழுடன், முன் அனுமதி பெற்ற பின் கூடுதல் அளவில், தக்காளி வழங்க உழவர் சந்தை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.வியாபாரிகளுக்கு கூடுதல் அளவில் விற்று, நுகர்வோருக்கு தக்காளி கிடைக்காமல் போனால், உழவர் அட்டை நிரந்தரமாக ரத்து செய்யப்படும் எனவும், தக்காளியை வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்யாமல், உழவர் சந்தைகளுக்கு கொண்டு வரவும் விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. உழவர் சந்தைகளின் மொத்த தக்காளி வரத்து அதிகரித்து, மேலும் விலை குறைய அதிக வாய்ப்பு உள்ளதால், உழவர் சந்தைகளை விவசாயிகள், நுகர்வோர் பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.உழவர் சந்தைகளில்நேற்று தக்காளி வரத்துமாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில், 25ம் தேதி(நேற்று)மொத்த தக்காளி வரத்து, 15 ஆயிரத்து, 130 கிலோ ஆகும். ஆர்.எஸ்.புரம்-3,900 கிலோ, சிங்காநல்லுார்-6,400 கிலோ, மேட்டுப்பாளையம்-1,580, பொள்ளாச்சி-500, வடவள்ளி-500, சூலுார்-750 மற்றும் சுந்தராபுரம்-1,500 கிலோ தக்காளி வரத்து இருந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X