செய்தி செய்தி

தமிழ்நாடு

இறப்பு காரணத்துக்கான மருத்துவ சான்று கட்டாயம் 

Added : நவ 26, 2021
Share
Advertisement
கோவை: கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்பு, வீடுகளில் நிகழ்ந்துள்ள பொதுவான இறப்பு காரணத்துக்கு சான்றிதழை பெற வேண்டும் என, மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.இது குறித்து, மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கை:கொரோனாவால் ஏற்படும் இறப்புகள், வீடுகளில் நிகழ்ந்துள்ள பொதுவான இறப்பு சான்றிதழ்களில் இறப்பிற்கான காரணம் குறிப்பிடப்படுவதில்லை. நிவாரண தொகை

கோவை: கொரோனா தொற்றினால் ஏற்படும் இறப்பு, வீடுகளில் நிகழ்ந்துள்ள பொதுவான இறப்பு காரணத்துக்கு சான்றிதழை பெற வேண்டும் என, மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.இது குறித்து, மாவட்ட கலெக்டர் சமீரன் வெளியிட்டுள்ள அறிக்கை:கொரோனாவால் ஏற்படும் இறப்புகள், வீடுகளில் நிகழ்ந்துள்ள பொதுவான இறப்பு சான்றிதழ்களில் இறப்பிற்கான காரணம் குறிப்பிடப்படுவதில்லை. நிவாரண தொகை மற்றும் பல சலுகைகள் பெற, இறப்பின் காரணம் அவசியமானது.மருத்துவமனைகளில் இறந்தால் படிவம் 4, வீடுகளில் இறந்தால் 4A சான்றிதழ்களைபிறப்பு, இறப்பு பதிவாளர்களிடம் பெற்றுக் கொள்ளலாம். இறப்பிற்கான காரணத்தில் திருப்தி இல்லாதவர்கள் என்னிடம் மனு அளிக்கலாம்.இதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் பரிசீலனைக்கு பிறகே இறப்பின் காரணத்திற்குரிய சான்று வழங்கப்படும். கொரோனாவால் இறந்த யாருக்கேனும், இறப்பின் காரணத்திற்கான சான்று கிடைக்க பெறவில்லை என்றால், இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X