செய்தி செய்தி

தமிழ்நாடு

தனியார் பஸ் இயக்கம் தாறுமாறு; அதிகாரிகள் 'கப்சிப்'

Added : நவ 26, 2021
Share
Advertisement
திருப்பூர்: நவ., 1ம் தேதி முதல் அனைத்து வழித்தடத்திலும், நுாறு சதவீத பயணிகளுடன் பஸ்கள் இயங்க அரசு அனுமதித்தது. அரசு பஸ்கள் 'டியூட்டி சார்ட்', 'டைமிங் சார்ட்' பின்பற்றப்பட்டு நடத்துனரிடம் கையொப்பம் பெறப்படுகிறது. அரசு பஸ்கள் இந்த நடைமுறைக்கு மாறி ஒரு மாதம் நிறைவு பெற உள்ள நிலையில், தனியார் பஸ்கள் நேர வரையறையை சரிவர பின்பற்றுவதில்லை.கலெக் ஷன் இருக்கும் போது, பஸ்



திருப்பூர்: நவ., 1ம் தேதி முதல் அனைத்து வழித்தடத்திலும், நுாறு சதவீத பயணிகளுடன் பஸ்கள் இயங்க அரசு அனுமதித்தது.
அரசு பஸ்கள் 'டியூட்டி சார்ட்', 'டைமிங் சார்ட்' பின்பற்றப்பட்டு நடத்துனரிடம் கையொப்பம் பெறப்படுகிறது. அரசு பஸ்கள் இந்த நடைமுறைக்கு மாறி ஒரு மாதம் நிறைவு பெற உள்ள நிலையில், தனியார் பஸ்கள் நேர வரையறையை சரிவர பின்பற்றுவதில்லை.கலெக் ஷன் இருக்கும் போது, பஸ் ஸ்டாண்ட் வரும் பஸ்கள் மற்ற நேரங்களில் இயக்கப்படாமல் ஒரமாக நிறுத்தப்பட்டு விடுகிறது. 'பீக்ஹவர்ஸில்' மட்டும் கலெக் ஷனுக்காக இயக்குகின்றனர். போக்குவரத்து துறை அரசு பஸ், தனியார் பஸ் இரண்டுக்கும் ஏற்றவாறு அட்டவணை தயாரித்து, அதற்கேற்ப பஸ் இயக்கம் முடிவு செய்கிறது.தற்போது, தனியார் பஸ்கள் சரிவர இயங்காததால், அடுத்தடுத்த அரசு பஸ் இயக்க வேண்டியுள்ளது. நேர மேலாண்மை கடைபிடிக்க முடிவதில்லை. தனியார் பஸ்கள் அட்டவணைப்படி, அதற்கான வழித்தடத்தில் மட்டும் இயங்குகிறதா அல்லது வழித்தடத்தை தவிர்த்து வேறு பகுதியில் சென்று வருகிறதா, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X