சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மஹா தீபம் காண மலை ஏறியவர் சாவு

Added : நவ 26, 2021
Share
Advertisement
திருவண்ணாமலை:திருவண்ணாமலையில் மஹா தீபம் காண மலை ஏறி சென்றவர், மூச்சுத் திணறி இறந்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை மீது, 19ம் தேதி மஹா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 11 நாட்கள் எரியும் மஹா தீபத்தைக் காண, மலை மீது ஏறி செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஆனால், சில பக்தர்கள் தடையை மீறி மலை மீது ஏறி செல்கின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த

திருவண்ணாமலை:திருவண்ணாமலையில் மஹா தீபம் காண மலை ஏறி சென்றவர், மூச்சுத் திணறி இறந்தார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலை மீது, 19ம் தேதி மஹா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 11 நாட்கள் எரியும் மஹா தீபத்தைக் காண, மலை மீது ஏறி செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஆனால், சில பக்தர்கள் தடையை மீறி மலை மீது ஏறி செல்கின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த கெங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த துரை, 32, என்பவர், நேற்று முன்தினம் மாலை தனியாக மலை மீது ஏறி மஹா தீபம் காண சென்றார்.செல்லும் வழியில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சுருண்டு விழுந்து இறந்தார். திருவண்ணாமலை போலீசார், அவரது உடலை மீட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X