செய்தி செய்தி

தமிழ்நாடு

கிராமங்களிலும் 'மூன்றாவது கண்'

Added : நவ 26, 2021
Share
Advertisement
பல்லடம்: பாதுகாப்பு நடவடிக்கை கருதி, ஆறுமுத்தாம்பாளையம் கிராமத்தில், பொதுமக்கள் பங்களிப்புடன் 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டது.வழிப்பறி, திருட்டு, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களுக்கான விசாரணையில், 'சிசிடிவி' கேமரா பதிவுகள், போலீசாருக்கு மிகவும் உதவியாக உள்ளன. தன்னார்வலர், பொதுமக்களின் பங்களிப்புடன் மட்டுமே, பொது இடங்களில் 'சிசிடிவி'


பல்லடம்: பாதுகாப்பு நடவடிக்கை கருதி, ஆறுமுத்தாம்பாளையம் கிராமத்தில், பொதுமக்கள் பங்களிப்புடன் 'சிசிடிவி' கேமரா பொருத்தப்பட்டது.வழிப்பறி, திருட்டு, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களுக்கான விசாரணையில், 'சிசிடிவி' கேமரா பதிவுகள், போலீசாருக்கு மிகவும் உதவியாக உள்ளன. தன்னார்வலர், பொதுமக்களின் பங்களிப்புடன் மட்டுமே, பொது இடங்களில் 'சிசிடிவி' பொருத்தப்படுகின்றன.இருப்பினும், கிராமப்புற பகுதிகளில் இவ்வசதி மிகவும் குறைந்த அளவு மட்டுமே உள்ளது. அவ்வகையில், திருப்பூர், பல்லடம், வேலம்பாளையம், மற்றும் ஆறுமுத்தாம்பாளையம் செல்லும் நால்ரோடு சந்திப்பு உள்ளது.வாகன போக்குவரத்து அதிகமுள்ள இந்த ரோட்டில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும், கடந்த சில தினங்களுக்கு முன், ஊருக்கு சம்பந்தமில்லாத சில நபர்கள், மது பாட்டில்களை மறைத்து வைத்தபடி நடமாடியது குறித்து பொதுமக்கள் போலீசில் புகார் தெரிவித்தனர்.இதனால், பாதுகாப்பு நடவடிக்கையாக, தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள் பங்களிப்புடன், நால் ரோடு பகுதியில் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதற்கான முயற்சியை, வார்டு உறுப்பினர் முத்துக்குமாரசாமி மேற்கொண்டார். பல்லடம் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் 'சிசிடிவி' இயக்கத்தை துவக்கி வைத்தார். இதனால், பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X